பக்கம்:மன ஊஞ்சல்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 25i ஜமீந்தார் மாளிகை வந்து விட்டது. ஆனால், தங்கம் தயங்கினான். அங்கே மாளிகை வாசலில்-நின்று கொண் டிருந்தது ஒரு ஜீப் கார் தங்கத்தைத் துளக்கிக் கொண்டோடிய அதே ஜீப் கார் தானோ அங்கே மாளிகை வாசலில் நின்று கொண்க.ாகர் க ச ? தங்கம் தயங்கினாள். ஒரு சுவர் ஒரமாக நிழலிலே ஒண்டிக் கொண்டு நின்றாள். அந்தப் போக்கிரிகள், தன்னை மடக்கிப் பிடிக்கத் தான் அங்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிய தங்கம் அங்கே நிற்பது கூடச் சரியில்லை என்று:எண்ணினாள். திரும்பிப் போகலாம் என்றால், எங்கே போவது? அந்த இளைஞனும் வேட்டையாடும் நண்பர்களும் அப்போதே அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார்கள், அவர் களுடனும் சேர்ந்து கொள்ள முடியாது. அருகில் இருக்கும் வீட்டுக்காரர்களில் யாரும் அவளுக்குத் தெரிந்தவர்கள் கிடையாது. மேற்கொண்டு இருட்டில் கதவு தட்டுவதும் சரியல்ல. அப்போது ஓர் உருவம் மாளிகையிலிருந்து வெளிப்பட்டு ஜீப்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜீப் புறப்பட்டால், அதன் முன் விளக்கின் ஒளியில் தான் இருப்பதைக் கண்டு பிடித்து விடமுடியும். இனிமேல் அந்த இடத்தை விட்டு ஓடுவதும் முடியாது. வழியில் போகும் போதே ஜீப்பில் இருப்பவர்கள் தன்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். போகவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தங்கம் விழித்துக் கொண்டு, பித்தம் பிடித்தவளைப் போல் அங்கே நின்றுகொண்டிருந்தாள். அப்போது இன்னும் இரண்டு பேர் அந்த ஜிப்பில் ஏறினார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/261&oldid=854381" இலிருந்து மீள்விக்கப்பட்டது