பக்கம்:மன ஊஞ்சல்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மன ஊஞ்சல் ஆச்சு! ஜீப் புறப்படப் போகிறது. ஸ்டார்ட் செய்து இயந்திரத்தின் சத்தமும் கேட்க ஆரம்பித்து விட்டது அதோ முன் விளக்கையும் தட்டிவிட்டான் காரோட்டி. அந்த ஒளி நேரே தங்கத்தின் மீது பட்டது. அவள் கண் கூசியது. "ஐயோ! மீண்டும் இந்தப் பாவிகள் கையில் சிக்கிக் கொண்டு விட்டோமே என்ற நினைப்பு தங்கத்திற்கு ஏற் பட்டது.

  • ஐயோ!' என்று கத்தினாள். அவ்வளவுதான் தெரியும்.

அடுத்த கணம் அவள் உணர்வற்றுத் தெருவில் விழுந்தாள். ஜீப்பிலிருந்த ஆட்கள் ஸ்டார்ட் செய்தபடியே அதை நிறுத்திவிட்டு அவள் விழுந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/262&oldid=854382" இலிருந்து மீள்விக்கப்பட்டது