பக்கம்:மன ஊஞ்சல்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

To 60f ஊஞ்சல் 26. பட்டணத்துத் தோழி மலர்க்கொடி தங்கம் நெடுநேரம் உணர்வற்றிருக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி கலந்த அச்சத்தால் அவள் உணர் விழந்து வீழ்ந்தாள் எனினும் விரைவில் அவளுக்குத் தன்னினைவு ஏற்பட்டு விட்டது. தங்கம் கண்விழித்துப் பார்த்த போது, இரண்டு ஆட்கள் அவளைத் துரக்கிக் கொண்டு போவதை உணர்ந்தாள். மெல்லத் தன் கண்களைத் திறந்த தங்கம் மேலும் அகலமாக அவற்றை விரித்து, என்ன நடக்கிறது என்பதை யறிய முற்பட்டாள். அவர்கள் தங்கத்தை மாளிகையை நோக்கியே தூக்கிக் கொண்டு போனார்கள். சுந்தரேசனுடைய ஆட்களாக இருந்தால் அவர்கள் மாளிகைக்குத் தன்னைத் தூக்கிச் செல்வது அருத்தமற்றது என்பதை அறிந்த தங்கம் தன்னைத் துக்கிச் செல்லும் ஆட்களைக் கவனித்தாள். ஆனால் இருட்டில் அவர்களுடைய உருவம் சரியாகப் புலப்படவில்லை. மாளிகை வாசலை யடைந்து அவர்கள் கதவைத் தட்டிய போது, கந்தசாமி வாத்தியார் தான் வந்து கதவைத் திறந்தார். அவர்கள் யாரையோ துரக்கிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/263&oldid=854383" இலிருந்து மீள்விக்கப்பட்டது