பக்கம்:மன ஊஞ்சல்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மன ஊஞ்சல் வந்ததைப் பார்த்த அவர் அது தங்கமாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்துக் கண்டுபிடித்து விட்டீர்களா, என் தங்கம் எப்படியிருக்கிறாள்?' என்று பதட்டத்தோடு கேட்டார். தூக்கி வரப்பட்ட நிலையில் தங்கத்திற்கு ஏதாவது விபத்து அல்லது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அவர் பயப்பட்டார். ஆனால் தூக்கி வந்தவர்கள், "கவலைப் படாதீர்கள்! ஆபத்து ஒன்றுமில்லை. இலேசான மயக்கம். அவ்வளவு தான்!” என்று கூறிக் கந்தசாமி வாத்தியாரைச் சமாதானப் படுத்தினார்கள். பிறகு உள்ளே கொண்டு போய் விளக்கெரிந்து கொண் டிருந்த ஓர் அறையில் தங்கத்தைப் படுக்க வைத்தார்கள். தன்னைத் துரக்கி வந்தவர்கள் யார் என்று அறிந்து கொள் வதற்காகத் தங்கம் மீண்டும் கண்களை அகலத் திறந்தாள். அவளைத் துக்கி வந்தவர்கள் வேறு யாருமல்ல, போலீஸ்காரர்கள்! போலீஸ்காரர்கள் கையில் அகப்பட்டதைப் பற்றித் தங்கம் மகிழ்ச்சியடைந்தாள். தங்கம் கண் விழித்ததைப் பார்த்ததும் அந்த அறைக்கு வந்திருந்த மரகத அம்மாள், தங்கம், எங்கள் யாரிடமும் சொல்லாமல் எங்கே யம்மா போனாய்?' என்று விசாரித்தாள். தங்கம் நடந்தவற்றையெல்லாம் சொன்னாள். ஆனால், சுந்தரேசனைப் பற்றி மட்டும் எதுவும் கூறவில்லை. அவன் பெயரை மறைத்துவிட்டு யாரோ ஒருவன் யாரோ ஒருவன் என்றே தெரியாத பாவனையாகக் குறிப்பிட்டுப் பேசினாள் தங்கம். சுந்தரேசன் மீது அவளுக்கு இன்னும் ஏதோ ஒரு விதமான பிரேமையிருந்தது என்பதையே அவளுடைய போக்கு எடுத்துக் காட்டியது. ஆனால், அது மற்றவர் களுக்குத் தெரியாது. அவர்கள் தங்கத்தைத் தேடியதுபற்றி அவள கேட்காமலே மரகத அம்மாள் கூறினாள். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/264&oldid=854384" இலிருந்து மீள்விக்கப்பட்டது