பக்கம்:மன ஊஞ்சல்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 255 தங்கத்தைத் தேடிகொண்டிருந்த விஷயம் எப்படியோ, அந்தவூர் இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்து, அவர் போவீஸ்காரர் களை விட்டுப் புலன் விசாரிக்கச்சொல்லியிருக்கிறார். அப்படி விசாரணையில் ஈடுபட்ட போலீசார் தான், யாரோ ஒரு கிராம வாசியின் மூலம் தங்கம் காட்டு வழியாகக் கடத்திச் செல்லப்பட்ட விஷயத்தை யறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கத்தைக் கண்டு பிடிக்கக் காட்டை யலசிக் கொண்டிருந்த போது வழியில், காட்டுப் பிள்ளையார் கோயிலிலிருந்து திரும்பிய ஜீப்பை வழிமறித்திருக்கிறார்கள். அந்த ஜீப்பும், அதில் இருந்த பொருள்களும், அது வந்த வேகமும் போலீஸாரின் சந்தேகத்திற்கிடமளித்திருக்கிறது. உடனே அவர்கள் ஜீப்பிலிருந்த ஆட்களை, போலீஸ் நிலையத்தில் அடைத்துவிட்டு மீண்டும் அந்த ஜீப்பிலேயே தங்கத்தின் வீட்டில் விசாரணை செய்ய வந்திருக்கிறார்கள். இதிலே தங்கம் கேட்டதிசயித்த விஷயம் என்னவென்றால் தான் சுந்தரேசன் பெயாை மறைத்தது போலவே அந்த் ஆட்களும், போலீசார் அடிதடிக்குப் பயந்து எல்லா விஷயங் களையும் உளறிய போதிலும் சுந்தரேசன் பெயரை மறைத்தே சொல்லியிருக்கிறார்கள். விசாரித்து விட்டுக் கிளம்பிய போலீஸ்காரர்கள் தான் தங்கத்தைத் தேடிவருவதற்காக ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு போக வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேடிப் போன பொன்னே தம்மைத் தேடி வந்ததைப் போல், தங்கமே தங்கள் எதிரில் வந்து நிற்பதைக் கண்டு அவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள். கடைசியில் அந்தப் போலீஸ்காரர்கள் தங்கத்தை ஒப்படைத்து விட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். கந்தசாமிப் பண்டிதரும், மரகத அம்மாளும், தங்கம் ஒரு பெரிய இக்கட்டிலிருந்து தப்பியதை எண்ணி மகிழ்ச்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/265&oldid=854385" இலிருந்து மீள்விக்கப்பட்டது