பக்கம்:மன ஊஞ்சல்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மன ஊஞ்சல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கத்தைக் காப்பாற்றிய அந்த இளைஞனைப் பற்றி நினைக்கும் போது அவர்களுடைய உள்ளத்திலே ஏதோ ஒரு விதமான கிளர்ச்சி ஏற்பட்டது. தங்கம் சொல்லிக் காட்டிய பிறகு அன்று காரில் முருகேச வாத்தியாருக்கு இடங்கொடுத்து விட்டுப் போன இளைஞன் அவனாக இருக்கக் கூடும் என்று எண்ணம் தெரிவித்த பிறகு அவர்கள் அவனுடைய உருவத் தோற்றத்தை நினைத்து நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அந்த இளைஞன் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கம் காணாமற்போய், இன்னலுக்காட்டட இருந்து திரும்பி வந்த நினைப்பு இரண்டொரு நாட்கள் வரையில் அவர்கள் உள்ளத்தில் குறுகுறுப்பாகவும் உறுத்தலாகவும் இருந்துகொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு பையப் பைய அதன் வேகம் தணிந்துவிட்டது. அதைப் பற்றிய எண்ணமே கூட மறைந்து மறக்கப்பட்டுப் போய்விட்டது. தங்கம் காணாமல் போய்விட்ட செய்தியறிந்தபின் அண்ணாமலைப் பண்டிதர் - (அதுதான் கயிலாயம்) மனத்தை யலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், யாரோ முரடர்கள் அவளைத் துரக்கிக்கொண்டு போய்க் கட்டாயத் திருமணம் செய்ய முற்பட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன், இது சுந்தரேசன் ஏற்பாடுதான் என்று அவர் யாரும் சொல்லாமலே தெரிந்து கொண்டார், பாம்பறியும் பாம்பின் கால் என்றது போல், தனக்குப் பிறந்தவனுடைய குணத்தை அவர் நன்கு தெரிந்துகொண்டுவிட்டார். ஆனால், அவர் மற்றவர்களைப் போல் கண்கலங்கவில்லை. என்றாலும், தங்கம் காணாமற் போய்த் திரும்பி வந்தது முதல்,சிறிதும் கலகலப்பில்லாமலும் சிந்தனையே வயப்பட்டவராகவும் இருந்துகொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சொல்லிச் சென்ற படி ராதாவும் நெய்யூரிலிருந்து தன் தாய் தந்தையரிடம் அனுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/266&oldid=854386" இலிருந்து மீள்விக்கப்பட்டது