பக்கம்:மன ஊஞ்சல்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 257 வாங்கிக்கொண்டு வந்து விட்டாள். அண்ணாமலைப் பண்டிதர் சென்னை செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். மரகத அம்மாளும், கொண்டு செல்வதற்கு வேண்டிய சாமான்களையெல்லாம் எடுத்து வைத்துப் பெட்டி படுக்கைகள் தயாரித்துக்கொண்டிருந்தாள். இரவு புறப்படும் இரயிலுக்குப் போக அவர்சள் அதிகாலை யிலிருந்தே அணியமானார்கள். இரவு எட்டு மணிக்கு வண்டி, அதற்கு ஆறு மணிக்கே மாட்டு வண்டிகளில் அவர்கள் புறப்பட்டார்கள். கந்தசாமி வாத்தியார் மட்டும் தான் மாளிகையில் மீதி. அவரும், மறு நாள் தாம் நெய்யூருக்குப் போய் விடப் போவதாகச் சொல்லி விட்டார். மறுபடியும் தோட்டக்காரச் சுப்பையா வசம் மாளிகையை ஒப்படைத்து விட்டு, எல்லோரும் இரயிலடிக்குப் போனார்கள். - கந்தசாமி வாத்தியார் பிளாட்பாரத்தில் நிற்க, கயிலாயம், மரகதம், தங்கம், ராதா, ஆகியவர்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். மரகத அம்மாள் தான் வாழ்க்கைப் பட்ட பிறகு ஒரு முறைகூடத் தன் கணவனை விட்டுப் பிரிந்ததேயில்லை. ஆனால் இப்போது புதிதாக அவரைப் பிரிந்து போவது அவளுக்குப் பெருந் துக்கமா யிருந்தது. கந்தசாமி வாத்தியாரைப் பார்த்து மாலை மாலையாகக் கண்ணிர் விட்டாள். அவளுக்கு வண்டியை விட்டு இறங்கிக் கொண்டு விடலாமா என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால் கந்தசாமி வாத்தியார் பல மாதிரியாகச் சமாதானம் சொல்லி அவளைத் தங்கத்துடன் அனுப்பி வைத்தார். வாத்தியார் உறுதி குலையாதவராகத் தான் இருந்தார். ஆனால், வண்டி நகர்ந்த பிறகு அவருக்கும் இரண்டு சொட்டுக் கண்ணிர் மன-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/267&oldid=854387" இலிருந்து மீள்விக்கப்பட்டது