பக்கம்:மன ஊஞ்சல்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மன ஊஞ்சல் ஊறித் துளிர்த்து விட்டது. தெரியாமலா, பிரிவு பெருந் துன்பம் என்று நூலோர்கள் கூறியிருக்கிறார்கள்! சென்னைக்கு வந்ததும், அண்ணாமலைப் பண்டிதர் முதலில், தங்கத்தை மட்டும்தன்னுடன் அழைத்துக் கொண்டு வக்கீல் வீட்டுக்கும், அரசாங்க அலுவலகங்களுக்குமாக அலைந்தார். மரகத அம்மாளும், ராதாவும் ஜமீந்தார் கருணாகரருடைய பட்டணத்து மாளிகையிலேயே தங்கி யிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தங்கம், தான் போய் வந்தது பற்றி அவர்கள் இருவருக்கும், ஏன் ஜமீந்தாரிணியம்மாளுக்கும் கூடச் சொல்லுவாள். மீதி நேரமெல்லாம், மரகத அம்மாளுக்கும், ராதாவுக்கும் ஜமீந்தாரிணியம்மாளுக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வதிலேயே கழிந்தது. எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ஒருநாள், வக்கீல் வேலாயுதம் அவர்கள் எல்லோரையும் தமது வீட்டுக்கு விருத்துக்கு அழைத்தார். ஜமீந்தார் கருணாகரர் ஜமீந்தாரிணி பெரியம்மாள், கயிலாயம், மாகத அம்மாள், தங்கம், ராதா எல்லோரும் வழக்கறிஞர் வேலாயுதம் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார்கள். விருந்துக்கு அவர்கள் மடடுந்தான் சென் றிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. வழக்கறிஞருக்கும், ஜமீந்தாருக்கும், பழக்கமானவர்கள் பலர் குடும்பங்குடும்பமாக வந்திருந்தார்கள். ஆனால், அன்று விருந்தில் உபசாரத்திற்கு நடுநாயகமாக விளங்கியவர்கள் கயிலாயமும், கருணாகரரும் தான்! விருந்து இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் மாளிகையின் வாசல் வளைவிலேயே பன்னிற மின்னொளி விளக்குகள் அதியற்புதமான வண்ணக் கதிர் களை வீசிக் கொண்டிருந்தன. மாளிகையின் உட்புறத்திலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/268&oldid=854388" இலிருந்து மீள்விக்கப்பட்டது