பக்கம்:மன ஊஞ்சல்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன் ஊஞ்சல் 259 வரவேற்புக் கூடம், விருந்து மண்டபம் முதலிய இடங்கள் பட்டப் பகலென ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. ஆடவரும் பெண்டிரும் அலங்காரமான அணிமணிகளும் அணிந்து, உல்லாச இன்பத்துடன் திகழ்ந்தனர். கூடிக் கூடிப் பேசுவோரும், கோதையரைத் தேடிச் சென்று பேசிச் சிரிப்பாரும், இன்னும் பலவிதமான முறையில் ஒருவரை யொருவர் நலம் விசாரிப்பாருமாக ஆண்களும் பெண்களும் ஒருவருடன் ஒருவர் கூடி புறவாடிய காட்சி இனிமையான தாக விருந்தது. விருந்துச் சாப்பாடு அருமை அருமையென்று பாராட்டும் படியாக அமைந்திருந்தது. விருந்துமுடிந்தவுடன் வழக்கறிஞர் வேலாயுதத்தின் மகள், பதினெட்டு வயதான பச்சைப் பசுங் கொடி போன்ற மலர்க்கொடி, இனிய பாடல்கள் பாடி, வந்திருந்த விருந்தினரை மகிழ்ச்சியுறச் செய்தாள். இவள் பாடுவதாக முன்னேற்பாடு ஒன்றும் கிடையாது. ஆனால், அங்கு வந்திருந்தவர்கள் அவள் பாட்டுப் பயிற்சி யும், இனிய குரலும் உடையவள் என்பதை யறிந்து, வற்புறுத்தியதன் பேரில், முதலில் நாணிக் கோணி மறுத்துக் கடைசியில் பாடத் தொடங்கினாள். அப்படியொன்றும், போற்றிப் புகழ்ந்து பாராட்டக்கூடிய அளவு அவள் அழகி யல்ல என்றாலும், பருவப் பூரிப்பு அவள் முகத்திற்கு அலாதி யான ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் அவள் குரலோ நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே யிருக்கும் படி உள்ளத்திலே வேட்கையை எழுப்பக் கூடிய அளவு இனிமை பொருந்தியதாக இருந்தது. இதுபோன்ற இனிய இசையை தங்கம் இதற்குமுன் எங்கும் கேட்டதில்லை. மலர்க்கொடியின் அமுத மயமான இசைக் குரலில் தங்கம் அப்படியே சொக்கிப் போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/269&oldid=854389" இலிருந்து மீள்விக்கப்பட்டது