பக்கம்:மன ஊஞ்சல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 17 தங்கம் அழகிருந்தும் அறிவிருந்தும் ப ண் பி ரு ந் து ம் குணமிருந்தும் பணமில்லாத குறையால் நாடுவார் இல்லாத பெண்ணாக இருந்தாள். அவள் அழகிருந்து அறிவில்லாத அந்த இளைஞனை நோக்கி இரக்கப் பட்டாள். வீட்டு முன் கதவு திறக்கப்படும் ஒசை கேட்டுத் தங்கமும் மரகத அம்மாவும் திரும்பிப் பார்த்தார்கள். கந்தசாமி வாத் தியாரும் முருகேச வாத்தியாரும் வருவதைக் கண்டு அவர்கள் எழுந்து ஒதுங்கி நின்றார்கள். படுக்கையில் கிடந்த அந்த வாலிபனைப் பார்த்தவுடன் முருகேச வாத்தியார், கோபத்துடன், “ஏண்டா, நீ எங்கே வந்தாய்? கலியாணம் செய்து கொள்ளப் போ கி ற பெண்ணைப் பார்த்துவிட்டுப் போகலாமென்றா வந்தாய்?" என்று சீறினார். கந்தசாமி வாத்தியாரோ அவர் தோளைப்பிடித்து. அமர்த்தி அவன் த ைல யி ல் கட்டுப் போட்டிருப்பதைச் சுட்டிக் காண்பித்துத் தம் நண்பரைச் சினம் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டிருந்தார். முருகேச வாத்தியாருடைய வார்த்தைகளைக் கேட்ட தங்கத்துக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. அடிபட்டுக் கிடந்த, ஒரு கையில்லாத பித்துக்குளி இளைஞன்தான் தன்னை மணக்கப் போகிற மாப்பிள்ளை என்பதையறிந்த போது, தன் தந்தை முதல் நாள் இரவு இந்தச் செய்தியைத் தான் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் திண்டாடினார் என்பதை நினைத்துப் பார் த் த போது , அவளுக்கு என்னவென்று சொல்ல முடியாத ஒரு மாதிரியாக வந்தது. தலையை ஒரு கையால் பற்றித் தாங்கிக்கொண்டே, அடுக்களை அறைக்குள் ஒடித் தரையில் குப்புற விழுந்து கொண்டு விசித்து விசித்து அழலானாள். to-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/27&oldid=854390" இலிருந்து மீள்விக்கப்பட்டது