பக்கம்:மன ஊஞ்சல்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மன ஊஞ்சல் மலர்க்கொடி பாடிய நேரம் முழுவதும் தங்கம் அவள் வாயையே பார்த்துக்கொண்டு அங்காந்தபடி யிருந்தாள். அவன் இவ்வுலகையே மறந்துவிட்டாள் - மலர்க்கொடியின் பாட்டில் - அதன் இசையில் அப்படியே கலந்து போய் இருந் திாள் என்றே சொல்ல வேண்டும். மலர்க்கொடியின் முகத்தில் வைத்த கண் மாறாது உட்கார்ந்திருந்த தங்கம், திடீரென்று, தான் பார்த்துக் கொண்டிருந்த முகத்தில் ஒர் உணர்ச்சி - இன்பத்தை யள்ளித் தெளிப்பதுபோன்ற ஒர் உணர்ச்சி மின்னிட்டுத் தோன்று வதைக் கண்டாள். மலர்க்கொடி, அந்த மண்டபத்திற்குள் நுழைந்த யாரையோ, மனங்கனிந்து இன்பந் துள்ளிக் குதிக் கும் ஆனந்த உணர்ச்சியுடன் வரவேற்பது போலிருந்தது. பாடிக்கொண்டிருந்தபோதே அவள் முகத்தில் வெளிப்பட்ட அந்தக் குறிப்பைக் கண்ட தங்கம் சட்டென்று மண்டப வாயிற் பக்கம் திரும்பிப் பார்த்தாள். இதென்ன இது! உண்மைதானா? இல்லை, தங்கம் கனவு காண்கின்றாளா? அவள் கண்டது யார்? அந்த இளைஞன் தான்! தன்னைத் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றிய அந்த மர்ம இளைஞன்தான் அவன்! இவன் எப்படி இங்கே வந்தான்! மலர்க்கொடி அவனை ஏன் இப்படி ஆனந்தம் பொங்க, பாட்டுக்கு மத்தியிலும் அன்புடன் வரவேற்க வேண்டும்! அவளுக்கும் அவனுக்கும் என்ன உறவோ! . திரும்பிப் பார்த்த தங்கத்தின் உள்ளத்தில் இத்தனை கேள்விகளும் எழும்பின. ஆனால், அவற்றிற்கெல்லாம் தக்க பதில்தான் கிடைககவில்லை. வந்த அந்த இளைஞன் விருந்தினரிடையே வேறு யாரும் கவனியாமலே அமர்ந்துவிட்டான். தங்கமும், பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/270&oldid=854391" இலிருந்து மீள்விக்கப்பட்டது