பக்கம்:மன ஊஞ்சல்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 261 திரும்பிய தன் முகத்தை மீண்டும் மலர்க்கொடியின் பக்கம் திருப்பிக் கொண்டாள். பாட்டு முடிந்தவுடனே, தங்கம் ஆவலோடு பின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். ஆனால், அவள் ஏமாற்றத்தைத் தான் சந்திக்க நேர்ந்தது. ஏனென் நால் அந்த இளைஞன் அங்கே காணப்படவில்லை. தங்கததிற்கும் ராதைக்கும் மலர்க்கொடி மிகுந்த நட்புடையவளாகி விட்டாள். மற்ற விருந்தினரெல்லாம் சென்றபின் அவர்கள் ஒருவருடன் ஒருவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறிது நேரத்திற்குள்ளேயே அவர்களுக்கிடையே வலுவான நட்பு ஏற்பட்டு விட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழகியவர்களைப் போல அவர்கள் ஒரு வருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார் கள். மூன்று பெண்களும் பேசிக் கொண்டிருந்த போது அந்தப் பக்கமாக வந்த கயிலாயமும் வழக்கறிஞர் வேலாயுத மும், இந்தப் பெண்கள் எப்படித்தான் இவ்வளவு சீக்கிர மாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்ளோ என்று பெண் கள் இயல்பைப் பற்றியே ஒர் ஆராய்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்டவுடன், மலர்க்கொடி தன் தந்தையை, நோக்கி, 'அப்பா இவர்கள் இருவரும் இதற்கு முன் பட்டணத்துக்கே வந்ததில்லையாம். ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமாம்" என்று செல்லமாகக் குழைவான குரலில் கூறினாள். 'உன் காரில், நாளை அவர்களை ஏற்றிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றிக் காண்பித்துவிட்டு வாயேன்!' என்று வழக்கறிஞர் கருத்துரைத்தார். உடனே மலர்க்கொடி தங்கத்தையும், ராதாவையும் நோக்கி, அப்படியானால், நாளைக்கு என்னோடு வருகிறீர் களா?' என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/271&oldid=854392" இலிருந்து மீள்விக்கப்பட்டது