பக்கம்:மன ஊஞ்சல்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மன ஊஞ்சல் 'சரி என்பதைத் தவிர அவர்கள் அந்த அன்பழைக்கு வேறு மறு மொழி என்ன சொல்ல முடியும்! மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவர்கள் புறப்படுவதென்று பேசிக் கொண்டார்கள். அதன்படி மறு நாள் காலையில் மலர்க்கொடி வீட்டில் அவர்களைக்கொண்டு போப் விடுவதற்காக கபிலாயமும் அவர்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மரகத அம்மாளைக் கூப்பிட்டதற்கு அவள், தலை நோவதால், தான் வரவில்லை என்று கூறி விட்டாள், கயிலாயத்துடன், தங்கமும் ராதாவும் புறப்பட்டு வீதிக்கு வந்து வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு போவற் காக ஏதாவது கார் வருமா என்று காத்துக் கொண்டிருந் தார்கள். அப்போது அவர்கள் எதிசில் அழகான ஒரு கார் வந்து நின்றது. அதை ஒரு பெண் ஒட்டிக் கொண்டு வந்தாள், அவர் காரிலிருந்து இறங்கிய பிறகு தான் அது மலர்க்கொடி என்று தெரிந்து கொண்டார்கள். உடனே தங்கமும் ராதை யும் அவளை ஒடிப் போய்க் கட்டிக் கொண்டார்கள். "மலர்க்கொடி உனக்குக் காரோட்டக் கூடத் தெரியுமா?’’ என்று வியப்புடன் கேட்டாள் ராதா. பதிலுக்கு ஒரு புன்னகையைத் தான் உதிர்த்தாள் மலர்க் கொடி. சரி, நீங்கள் போய் வாருங்கள்!' என்று கூறிவிட்டு கயிலாயம் வீட்டின் உள்ளே போய்விட்டார். தங்கமும் ராதாவும், காரில் பின்புறமாக ஏறிக் கொள்ள, மலர்க்கொடி முன்னால் ஏறி உட்கார்ந்து காரை ஓட்டிச் சென்றாள். சிறிது தொலைவு சென்றதும், "எங்கே போக வேண்டும்?' என்று மலர்க்கொடி கேட்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/272&oldid=854393" இலிருந்து மீள்விக்கப்பட்டது