பக்கம்:மன ஊஞ்சல்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மன ஊஞ்சல் கார் எந்தெந்தப் பாதையிலோ சுற்றி நேடுநேரம் ஒடிக் கொண்டிருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விலங்குக் காட்சி சாலைக்கு வரக் கால் மணி நேரம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால், இப்போது கார் அரைமணி நேரத் திற்கு மேல் ஒடியும் வீடு அருகில் இருப்பதாகத் தோன்ற வில்லை. 'மலர்க்கொடி எங்கே காரை ஒட்டுகிறாய்?' என்று பின்னாலிருந்து கேட்டார்கள். “சாப்பாட்டுக்குத்தான்போகி றோம்!" என்று முன் புறம் இருந்தபடியே பதிலளித்தாள் மலர்க்கொடி. மலர்க்கொடி, பாதை தவறி விட்டாள் என்று தான் அந்தப் பெண்கள் இருவரும் எண்ணினார்கள். அதற்குத் தகுந்தாற்போல், காரும் பட்டணத்துச் சந்தடிகள் இல்லாத அமைதியான ஒரு பாட்டை வழியாக ச் சென்று கொண் டிருந்தது. கடைசியில் கடற்கரையை அடுத்த ஒருசோலை வனத்தின் மத்தியிலே ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினாள் மலர்க் கொடி. தங்கமும் ராதாவும் திகைப்படைந்து போய் இருந் தார்கள். ஆனால், அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தங்கம் மலர்க்கொடியை நோக்கி, 'காரை இங்கே நிறுத்தி விட்டாயே சாப்பிடப் போக வேண்டாமா?’ என்று கேட்டாள். 'சாப்பாடு சாப்பாடு: சாப்பாடு எதற்கு வேண்டியிருக் கிறது! ஒருநாள் சாப்பிடாமல்இருந்தால் என்ன?’ என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கினாள் மலர்க்கொடி. அவள் போக்கின் பொருள் புரிபடாமல் தங்கமும் ராதா வும் கீழே இறங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/274&oldid=854395" இலிருந்து மீள்விக்கப்பட்டது