பக்கம்:மன ஊஞ்சல்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 265 “ஆகா! இந்த வெயிலுக்கு இந்த இடம் எவ்வளவு குளுமையாக இருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே, மலர்க்கொடி அவர்கள் இருவரையும் நோக்கினாள்.அவளைப் பார்த்தால் வழி தவறிவிட்டோமே என்றோ, சாப்பாட்டிற்கு வீட்டிற்குப் போக வேண்டுமே யென்றோ வருத்தப்படு பவளாகத் தோன்றவில்லை. அவள் தங்களிடம் ஏதோ விளையாடுகிறாள் என்று தங்கம் புரிந்து கொண்டாள். ஆனால், ராதா அதைப் புரிந்து கொள்ளவில்லை. "சிறிது நேரம் அதோ அந்த மரத்தடியில் போய் உட்கார்ந்திருங்கள். நான் இந்தக் காரைப் பழுது பார்த்து விட்டு வருகிறேன்’ என்று சிரிக்காமல் சொன்னாள் மலர்க் கொடி. இரண்டு பெண்களும் அவள் குறிப்பிட்ட ஒர் ஆலமரத் தடியை நோக்கிச் சென்றார்கள். களைப்பாக இருந்ததால், அதன் அடியில்அமர்ந்து தொலைவிலே கொந்தளித்துக்கொண் டிருக்கும் கடலையும், மேலே கீச்சிட்டுக்கொண்டிருக்கும் குருவி முதலிய பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந் தார்கள். நெடுநேரம் அவர்களால் பொழுதைப் போக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியவில்லை. சுமார் பத்து நிமிடங் களுக்குப் பிறகு, அவர்கள் வயிற்றுப் பசி தாங்காமல் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டி வந்தது. அவர்கள் மலர்க் கொடி காரை நிறுத்திய பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது மலர்க்கொடி அவர்களை நோக்கி வந்தாள். சிரித்துக்கொண்டே, "சாப்பிடப் போவோமா?’ என்று கேட்டாள். தங்கமும் ராதாவும் எழுந்திருந்தார்கள். சிறிது தூரம் வந்ததும் அவர்கள் அப்படியே நின்று வியப்பில் ஆழ்ந்து விட்டார்கள். அங்கே மரத்தடியில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/275&oldid=854396" இலிருந்து மீள்விக்கப்பட்டது