பக்கம்:மன ஊஞ்சல்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மன ஊஞ்சல் பாய் விரித்து. அதன் மேல் மூன்று இலைகள் போடப்பட் டிருந்தன. எதிரில் சின்னதும பெரியதுவான சட்டிகளில் சோறும் கறிகளும் இருந்தன. 'மலர்க்கொடி இதெல்லாம் என்ன?’ என்று வியப்புடன் கேட்டாள் தங்கம். 'சாப்பாடு!" என்றாள் மலர்க்கொடி. அந்தப் பதில் தங்கத்தின் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியதாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மலர்க்கொடி தங்கம் நான் புறப்படும் போதே அம்மா சோறு கட்டிக்கொடுத்துவிட்டார் கள். இப்போது நாம் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறுவோம். இங்கிருந்து மியூசியத்திற்குப் போய்ப் பார்த்துவிட்டு மாலையில் மெரினாவுக்கு போகலாம் : என்றாள் மலர்க்கொடி. பிறகு மலர்க்கொடியின் குறும்பைப் பற்றிப் பேசிக் கொண்டே அந்தப் பெண்கள் மூவரும் உணவுண்டார்கள். இளைப்பாறி முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்ற போது, வழியில் ஒரு பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/276&oldid=854397" இலிருந்து மீள்விக்கப்பட்டது