பக்கம்:மன ஊஞ்சல்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ո6յT ஊஞ்சல் 27. பொல்லாத இதயம் இது அம்மா! மலர்க்கொடி கடற்கரைச் சாலையில் காரை ஒட்டிக் கொண்டு சென்றாள். அப்போது அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் காரைக் கடந்து ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. அதைக் கண்டவுடன் ராதா, தங்கத்தின் இடுப்பில் இடித்து, 'தங்கம், அதோ பார்த்தாயா, உன் அத்தான் சுந்தரேசன்' என்று சுட்டிக் காண்பித்தாள். தங்கம் அந்த மோட்டார் சைக்கிள் பக்கம் தன் பார்வையைச் செலுத்திய போதுதான் அந்த விபத்து நடந்தது. எதிர்ப் பக்கமாக ஒரு கார் வந்தது. சாலையைக் குறுக்கே கடந்து கொண்டிருந்த ஒருவன், அந்தக் காருக்குத் தப்புவதற்காக விலகினான். அதே சமயம், சுந்தரேசனுடைய மோட்டார் சைக்கிள் அந்த மனிதன் மீது பாய்ந்தது. அந்த மனிதன், மோட்டார் சைக்கிள் தன்னை மோதிய வேகத்தில் சுற்றிச் சுழன்று கீழே விழுந்தான். அவன் விழுந்ததைப் பற்றிச் சிறிதும் இலட்சியப் படுத்தாமல், சுந்தரேசன் வெகு வேகமாக மோட்டார் சைக்கிளை விட்டுக்கொண்டு சென்றுவிட்டான். தரையில் அந்த மனிதன் விழுந்த அதே நேரம் மலர்க் கொடியின் கார் அந்த இடத்தை நோக்கி வந்தது. நல்ல வேளை! மலர்க்கொடி அழுத்தமாக ஒரு பிரேக் போட்டுக் காரை அப்படியே சிறிது தள்ளியே நிறுத்திவிட்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/277&oldid=854398" இலிருந்து மீள்விக்கப்பட்டது