பக்கம்:மன ஊஞ்சல்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மன ஊஞ்சல் இல்லாவிட்டால், கீழே விழுந்து கிடந்த அந்த மனிதன் மீது அவள் கார் ஏறியிருக்கும். அடிபட்டவன் அருகில் நின்றால், அகப்பட்டுக்கொள்ள நேரும் என்று பயந்துதான் சுந்தரேசன் வேகமாகச் சைக்கிளை விட்டுக்கொண்டு போய்விட்டான் என்று எண்ணி னார்கள் அந்தப் பெண்கள். ஆனால், அருகில் வந்து கீழே யிறங்கி அடிபட்டுக் கிடந்த ஆளைப் பார்த்த பிறகுதான் சுந்தரேசன் அவ்வளவு வேகமாக ஒடியதன் பொருள் அந்தப் பெண்களுக்கு விளங்கியது. ஒருவேளை சுந்தரேசன் வேண்டு மென்றே கூட அந்த ஆளை அடித்துச் சாய்த்திருப்பானா என்றுகூட எண்ணம ஓடியது தங்கத்திற்கும் ராதாவிற்கும். காரை நிறுத்தியதும், மூன்று பெண்களும் விரைவாகக் கீழே ஒடி வந்து அடிபட்ட ஆளைக் கவனித்தார்கள். உடனே அந்த மூன்று பெண்களுக்கும் வியப்பும் திகைப்பும் அதிர்ச்சியும் ஆகிய உணர்ச்சிகள் ஒரே மட்டாக எழுந்தன. 'ஆ நீங்கள்?' என்று அலறினாள் மலர்க்கொடி. "ஐயோ! நீங்கள்தானா?” என்று பதறினாள் தங்கம். "ஐயோ! உங்களுக்கா இப்படி நேரிட்டது?’ என்று கூவினாள் ராதா. அடிபட்டுக் கிடந்த மனிதனைக் கண்டதும் அந்த மூன்று பெண்களுக்கும் இதயத்தில் ஏற்பட்ட துன்பம் ஒரே மாதிரி யாக இருந்தது. அந்த மனிதனை அவர்கள் மூவரும் அறிவார்கள். மலர்க்கொடி உடனடியாக அவனுடைய உடலைத் தரக்கித் தன் மடியில் கிடத்திக்கொண்டாள். அவள் கண் களிலிருந்து நீர் பொலபொலவென்று உதிர்ந்தது. இருப்பினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/278&oldid=854399" இலிருந்து மீள்விக்கப்பட்டது