பக்கம்:மன ஊஞ்சல்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 269 அந்தக் கண்கள். அவனுக்கு எங்கே எந்த இடத்திலே அடி அல்லது காயம்பட்டிருக்கிறது என்று ஆராயத் தவறவில்லை?. அடிபட்டு விழுந்த அந்த மனிதனின் ஆசனப் பக்கத்தில் ஊமைக்காயம் ஒன்று ஏற்பட்டிருந்தது. வலது முழங்கை தரையில் அடிபட்டுத் தோல் உரிந்து காயம் ஏற்: 'ட்டு இரத்தமும் சலமும் கசிந்து கொண்டிருந்தன. இடதுகையோ. அதுதான் பார்க்கப் பொறுக்க முடியாத காட்சியாக இருந்தது. இடது கையில் மணிக்கட்டு அளவில் கை துண்டிக்கப்பட்டதுபோன்ற காயம் அந்த வெட்டுக் காயத் தினின்றும் இரத்தம் கொத கொதவென்று வடிந்து தரையை ஈரச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடனே மலர்க்கொடியின் பதற்றம் மேலும் அதிகமாகியது. உடனே தன் சேலைத் தலைப்பைக் கிழித்து அந்த வெட்டுக் காயத்தில் சுற்றிக் கட்டினான். பிறகு தங்கத்தை நோக்கி தங்கம், இவரை நாம் உடனே மருத்துவ விடுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும். துரக்கிக் காரில் கொண்டு போங்க் கிடத்தலாமா" என்று கேட்டாள். அடிபட்ட அந்த மனிதனோ தன்னுணர்வு அற்றுக் கட்டை போலக் கிடந்தான். தங்கம் அவனை உற்று நோக்க நோக்க அவளுக்குப் பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்டன. அந்த மனிதன் தான் தன்னைக் காட்டுப் பிள்ளையார் கோயிலில் சுந்தரேசனிட மிருந்து மீட்டுக் காப்பாற்றியவன் என்று தங்கம் தெரிந்து கொண்டாள். அந்த மனிதன் தான் இராதாவும் முருகேச வாத்தியாகும் நெப்யூரில் காரில் இடங் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தபோது இடங்கொடுத்தவன் என்று தெரிந்து கொண்டாள். அந்த மனிதன்தான் முதல்நாள் மலர்க்கொடி பாடிக்கொண்டிருக்கும்போது வந்து அவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/279&oldid=854400" இலிருந்து மீள்விக்கப்பட்டது