பக்கம்:மன ஊஞ்சல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அண்ணாமலைப் பண்டிதர் நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை விசித்திரமாகத் தான் தோன்றும். பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே நாம் பார்த் திருக்கிறோம் நமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் யாராவது திடீரென்று நம்மைச் சந்திக்கிறார்கள், பிறகு அவர்கள், ஏரேழு தலைமுறைக்கு முன்னாலிருந்தே நம்மோடு ஐக்கியமாக இருந்து வந்திருக்கவேண்டிய உறவினர்களாக இருப்பதை அறிந்து கொள்ளும்படி நேரிடுகிறது. எங்கோ, எப்போதோ, எதற்காகவோ நம் மூதாதையர் காலத்திலே விட்டுப்போன உறவு நம் காலத்திலே ஒட்டிக்கொள்ள ஆரம் பித்து விடுகிறது. சில சமயங்களில் அவர்கள் நம் உறவினர் களாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஏற்படுகின்ற நட்பு, பிரிக்க முடியாத வகையில் ஒட்டிக்கொண்டு விடுகிறது. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த உறவுதான் அண்ணாமலைப் பண்டிதருக்கும் கந்தசாமி வாத்தியாருக்கும் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். அண்ணாமலைப் பண்டிதர் நெய்யூரைச் சேர்ந்தவரல்ல; நெய்யூருக்கு இதற்குமுன் வந்தவருமல்ல, ஆனால், அவர் நெய்யூருக்கு வந்த பிறகு நெய்யூரிலே ஒரு கலகலப்பு ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வந்த பிறகு நெய்யூரிலே கட்சி தோன்ற ஆரம்பித்து விட்டது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/28&oldid=854401" இலிருந்து மீள்விக்கப்பட்டது