பக்கம்:மன ஊஞ்சல்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மன ஊஞ்சல் கவனத்தை இழுத்தவன் என்றும் தெரிந்துகொண்டாள். ஆனால், இதற்கெல்லாம் முன்னால் எல்லாவற்றுக்கும் முன்னால் அவனைத் தான் எங்கோ சந்தித்திருப்பதாக ஓர் உணர்வு மீண்டும் அவளுக்கு வராமல் இல்லை. அந்த உணர்வு இப்போது அவளுடைய உள்ளத்தில் புகுந்து ஒரு கற்பனையை உருவாக்கியது. அது இதுதான்! மணிக்கட்டுக்கு கீழே கையில்லாத அந்த நிலையில் உள்ள மற்றொருவனின் உருவம் அவள் மனக்கண்முன் தோன்றியது. அந்த உருவம் தான் முருகேச வாத்தியாரின் வளர்ப்புப் பிள்ளையாக இருந்த நடராசனின் உருவம். அந்த உருவத்துடன் இந்த இளைஞனை ஒப்பிட்டுப் பார்த்தாள் தங்கம், இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு! இல்லை, அப்படியிருக்கமுடியாது என்று அவள் அறிவு வாதாடியது. நடராசனைப் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. அவன் உருவம் அவள் மனத்திரையில் மங்கலாகத்தான் தெரிந்தது. அந்த உருவம்போல் இந்த இளைஞனும் இருக்கிறான் என்று அவள் எப்படி முடிவுகட்ட முடியும். ஆனால், கையளவிலே இருவரும் ஒரு நிலையில் தான் இருந்தனர். நடராசன் ஆரம்பத்திலிருந்தே கையிழந்த வனாகத்தான் அவளுக்கு அறிமுகமானான். ஆனால், இப்போது அடிபட்டுக் கிடக்கும் இந்த இளைஞனோ, இப்போதுதான் கையை இழந்திருக்கிறான்; சைக்கிளில் அடிபட்டு அவன் கை எப்படியோ வெட்டுப்பட்டிருக்கிறது. இதற்குமுன் தான் பார்த்தபோதெல்லாம் அவனுக்குக் கை யிருந்தது. ஆகவே, இவன் நடராசன் அல்ல. ஆனால், இவனை முன்னரே பார்த்திருப்பது போல் தனக்கு மீண்டும் தோன்றுவதற்குக் காரணம் என்ன? இது புரியாமல் தான் தங்கம் திகைத்துக் கொண்டிருந்தாள். மலர்க்கொடியின் குரல் கேட்டுத் தங்கத்தின் சிந்தனை பட்டென்று அறுந்தது. மலர்க்கொடி என்ன சொன்னாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/280&oldid=854402" இலிருந்து மீள்விக்கப்பட்டது