பக்கம்:மன ஊஞ்சல்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 27; என்பதே அவள் காதில் விழவில்லை, ஆனால், அவள் தன்னை அழைத்தது மட்டும் தெரிந்தது. திடீரென்று துரக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவள் போல் அவள். பேசினாள். "மலர்க்கொடி, இவரை நாம் மருத்துவ விடுதிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டால் என்ன?” அந்த நேரத்தில் வீதியில் யாரும் இல்லை. ஆகவே பெண்கள் மூவரும் தாங்களாகவே தான் எல்லாம் செய்ய நேரிட்டது. மூன்று பேருமாகச் சேர்ந்து அந்த இளைஞனைக் தூக்கிக் கொண்டு வந்து காரில் கிடத்தினார்கள். பிறகு, பின் சீட்டில் ஓர் ஒரமாக இருந்து அவனைக் கவனித்துக் கொள்ளும்படி ராதாவை இருக்கச் சொல்லி விட்டு தங்கமும் மலர்க்கொடியும் முன் பக்கமாக இருந்து கொண்டார்கள். மலர்க்கொடி, காரை யோட்டிக் கொண்டு சென்றாள். பெரிய மருத்துவவிடுதியில் கொண்டு போய் நடந்த விவரங்களைச் சொல்லி, அந்த இளைஞனை டாக்டர்கள் வசம் ஒப்படைத்தார்கள். ஆனால், சுந்தரேசன் பெயரை மட்டும் கூறவில்லை. தங்கம், மலர்க்கொடி, ராதா மூன்று பேருமே ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமலே இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள். அடித்து வீழ்த்தி வீட்டுப் போனவன் யாரோ தெரியவில்லை என்றே கூறினார்கள். அந்த மட்டுக்குச் சுந்தரேசன் தப்பினான். ஆனால், கடைசிவரை தன் அத்தான் சுந்தரேசன் அகப்பட்டுக் கொள்ளாமல் இருப்பானா என்று தங்கத்திற்குச் ஐயமாகவே யிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/281&oldid=854403" இலிருந்து மீள்விக்கப்பட்டது