பக்கம்:மன ஊஞ்சல்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மன ஊஞ்சல் ஏனென்றால், அடிபட்டு உணர்வற்றுக் கிடக்கும் அந்த இளைஞன் தன்னுணர்வு பெற்றுக்கண் விழித்ததும்jஎன்னைத் தள்ளிச் சென்றவன் இவன் என்று சொல்லி விட்டால், சுந்தரேசன் மீது வழக்குத் தொடுக்காமலா விடுவார்கள்?. மருத்துவ விடுதிக்கு வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குப் பிறகு அத்த இளைஞன் கண் விழித்தான். விழித்த உடனே அவன் கண்ணுக்கு முதலில் மலர்க்கொடி தான் தெரிந்தாள்போவிருக்கிறது தன் வேதனையெல்லாம் மறந்து, ஆ1 மலர்க்கொடி! நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று முகத்தில் ஒளி மின்ன உற்சாகத்தோடு கேட்டான். "ஆம்! ராஜு!’ என்று அதே ஆர்வத்தோடு பதிலளித் தாள் மலர்க்கொடி. அவர்கள் இருவரிடையேயும் ஏற்பட்ட அந்த அன்பும் ஆர்வமும் கலந்த உரையாடலைக் கேட்ட தங்கத்திற்கு என் ளவோ மாதிரியிருந்தது. அவன் கண்ணில் படாமல் விலகி நின்று கொள்ள முயன்றாள். ஆனால் அதே சமயம் அந்த இளைஞன் தங்கத்தைப் பார்த்துவிட்டான். 'ஆ! நான் என்ன கனவு காண்கிறேனா? இதோ தங்கம், பக்கத்திலே அவர்களின் தோழி ராதா! மலர்க்கொடி நான் காண்பதெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டாள். . ஆ! இது தங்கம்தான்! இது ராதாதான்! இவர்கள் என் தோழிமார்கள், ஏன் இவர்களை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?' என்று கேட்டாள் மலர்க்கொடி. அதற்கு அந்த இளைஞன் பதில் கூறவில்லை. அவ்வளவு நேரமும் ஆழ்ந்த சிந்தனையோடு அந்த இளைஞன் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/282&oldid=854404" இலிருந்து மீள்விக்கப்பட்டது