பக்கம்:மன ஊஞ்சல்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 273 தங்கம் தன் பெயர் குறிப்பிடப்பட்டதும் திடுக்கிட்டுத் தன் சிந்தனையை விட்டு நிலையான தன்மைக்குத் திரும்பினாள். இந்தச் சமயத்தில் அங்கு வந்த நர்சு ஒருத்தி, மூன்று பெண்களையும் பார்த்து, 'அம்மா, இனிமேல் நீங்கள் இங்கு இருக்கக் கூடாது. பார்க்க வேண்டுமானால் தாளை மாலை நான்கு மணிக்கு மேல் வாருங்கள்" என்று புறப்படச் சொல்லி வற்புறுத்தினாள். மலர்க்கொடி வேண்டா வெறுப்பாக அந்த இளைஞனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே நடந் தாள். தங்கமும் இராதாவும் நகரும் கற்சிலைகளைப்போல் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள். வெளியில் வந்தபோது மலர்க்கொடியின் முகம் கூம்பிய தாமரையைப்போல் காட்சியளித்தது. "தங்கம் இன்று நாம் புறப்பட்ட நேரம் சரியில்லை. அவருக்கு இந்த மாதிரி ஏற்பட்டு பாவம் கை வேறு போய் விட்டது: என்று தளதளத்த குரலில் கூறினாள். மலர்க் கொடி. தங்கம் ஆற்ற முடியாத துயரத்தோடு மலர்க்கொடியை நிமிர்ந்து நோக்கினாள். ஆனால், அவள் எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை. சொல்லக் கூடிய நிலையில் அவள் இல்லை. அவள் நெஞ்சகத்துக்குள்ளேதான் அப்போது எத்தனை வெத்தனை குழப்பம்! காரில் ஏற்றிக் கொண்டு வந்து தங்கத்தையும் ராதாவை யும் ஜமீந்தார் வீட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போனாள் மலர்க்கொடி. கார் மறைந்தவுடன் தங்கத்தை நோக்கி ராதா ஏன் தங்கம். அந்த ராஜூவும் நம்ம நடராசனும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் இல்லையா? என்று கேட்டான். டி-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/283&oldid=854405" இலிருந்து மீள்விக்கப்பட்டது