பக்கம்:மன ஊஞ்சல்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மன ஊஞ்சல் "அப்படியா?" என்று திரும்பிய தங்கம், ராதாவை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். ராதாவின் உள்ளத்திலும் தனக் கேற்பட்டிருப்பது போலவே சிந்தனைக் குழப்பம் ஏற்பட் டிருக்கிறது என்று தெரிந்து கொண்டாள் தங்கம். உடனே, தங்கம் தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டாள். ராதா வின் உள்ளக் கிடக்கையை அறிய வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டாள். "அப்படியா: கைதான் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. முகமுமா அப்படியிருக்கிறது?’ என்று கேட்டாள் தங்கம், இந்த வார்த்தைகள் ராதாவின் உள்ளத்தில் சுருக் கென்று முள்ளைப்போல் கைத்திருக்க வேண்டும். இதைக் கேட்டதும் அவன் முகத்தில் எத்தனை வேதனையான சுளிப்புகள் ஏற்பட்டுவிட்டன: 'தங்கம் மனிதர்களின் உடலில் உள்ள ஊனங்களால் அவர்களுடைய பெருமை குறைந்துவிடுவதில்லை. அவர் களுடைய உள்ளத்தின் நேர்மையே உயர்வையும் சிறப்பையும் உண்டாக்கும். அந்த உள்ளத்தின் தன்னக அவர்கள் முகத் திலே விளங்கித் தோன்றும். இந்த ராஜு நடராசனைப் போல் உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் ஒற்றுமையுள்ள வர் என்பதை அவருடைய கள்ளங்கபடமற்ற முகமே நமக்குக் காட்டுகிறது. ஆனால், ஒரே ஒரு வேற்றுமை. நடராசன் முகத்தில் கபடமில்லாத அசட்டுத்தனத்தைக் கண்டிருக் கிறோம். இந்த ராஜூவின் முகத்தில் குறையில்லாத உறுதிப் பண்பு வெளிப்பட்டுத் தெரிகிறது!’ என்று ராதா விவரித் தாளி, 'அப்படியானால், நடராசனைவிட இவர் சிறந்தவர் என்று சொல்லுகிறாயா?" என்று கேட்டாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/284&oldid=854406" இலிருந்து மீள்விக்கப்பட்டது