பக்கம்:மன ஊஞ்சல்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 275 'தங்கம், ஒரே மாதிரியான இரண்டு பொருள்களை வைத்துக் கொண்டு ஒன்றைவிட மற்றொன்று உயர்வு என்று எப்படித் தீர்மானிக்க முடியும்; என்றாள் ராதா. 'ஒன்றும் தெரியாத அசடைவிட உறுதிப் பண்புள்ள ஒருவர் உயர்ந்தவரில்லையா?” என்று கேட்டாள் தங்கம். 'உனக்கு எப்போதும் நடராசனைப் பிடிக்காது' என்றாள் ராதா. "உனக்கு எப்போதும் நடராசனைத்தான் பிடிக்கும்!” என்று தங்கம் சொன்னவுடன் ராதாவின் முகத்தில் ஏற்பட்ட அந்த ஒளி-கதிரவனிடம் கூட இல்லையென்று சொல்லலாம்.

  • நடராசனைப் பிடிக்கும்!’ என்ற அந்தச் சொல்தான் அவள் இதயத்தில் எத்தனை மலர்ச்சியை உண்டாக்கி விட்டது. அந்த இதய மலர்ச்சியின் அடையாளமாக அவள் முகம்தான் எவ்வளவு விரிவாக மலர்ந்துவிட்டது. மலர்ந்த அந்த முகத்தில் நாணம் தோன்றியபோது அது எவ்வளவு அழ காகச் சிவந்துவிட்டது: ராதாவை அந்த நிலையிலேயே புகைப்படம் பிடித்து வைத்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று தங்கம் எண்ணினாள்.

அவ்வளவு இன்பத்தை அந்த ஒரு சொல் உண்டாக்கி விட்டது. ராதா நடராசன் மேல் கொண்டிருந்த துய அன்பின் தன்மையைத் தங்கம் அப்போது மீண்டும் உணரும்படி நேரிட்டது. மரகத அம்மாளின் வருகையால் அவர்களின் பேச்சு, அந்த மட்டோடு தடைப்பட்டுவிட்டது. அன்று இரவு முழுவதும் தங்கத்திற்குத் துக்கமே வர வில்லை. திரும்பத் திரும்ப அந்த இளைஞன் ராஜூவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/285&oldid=854407" இலிருந்து மீள்விக்கப்பட்டது