பக்கம்:மன ஊஞ்சல்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஒளஞ்சல் 277 கள் எல்லாம், மனத்திற்குகந்த காதலர்களைப் பெற்று மகிழ்ந்திருக்கும் போது, தான்மட்டும் ஏன் தோல்வியடையக் கூடிய காதலுக்காளாக வேண்டும்? எதிரில் தோன்றிய அந்த உருவங்களைக் காணக் காணத் தங்கத்திற்கு இந்த மாதிரி யான ஆபாசமான எண்ணங்கள் ஏற்பட்டன. திடீரென்று அந்த உருவங்கள் வானை நோக்கிச் சென்றன. அப்படியே ஆகாயத்தோடு ஆகாயமாய் மறைந்து விட்டன. நடராசன், ராஜூ, ராதா மலர்க்கொடி எல்லோரும் மறைந்து விட்டார்கள். தங்கம் கண்ணைச் கசக்கிக் கொண்டு பார்த்தாள். இருட்டடைந்த அறையிலே இருந்த சன்னல் வழியாக வெளியில் தெரிந்த நீல நிறமான வானத் திலே நான்கு நட்சத்திரங்கள் தான் சுடர் விட்டுக் கொண்டி ருந்தன. அத்தனையும் கனவு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/287&oldid=854409" இலிருந்து மீள்விக்கப்பட்டது