பக்கம்:மன ஊஞ்சல்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D6] ஊஞ்சல் 28. ராதாவுக்கு வந்த கடிதம் தங்கத்தின் எண்ணம் அவள் அறிவின் பிடியிலிருந்து நழுவியது. அது திரும்ப அந்தப் புதிய இளைஞன் ராஜூவின் மீதே போய்ப் படிந்தது. ஏதோ என்று அவள் உள்ளத்தை அவன் நினைப்பிலேயே சுழன்றாடும்படி செய்து கொண்டிருந்தது. அத்தான் சுந்தரேசன் மீது அவளுக்குத் தடுக்கமுடியாத ஒர் அன்பு ஏற்பட்டது. அவனும் அவளை விரும்புவதாகக் காட்டிக் கொண்டான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவனை அவள் எண்ணிய போதும், ஒவ்வொரு முறையும் அவளுடைய உள்ளம் அவன் பால் ஈடுபட்டபோதும் அவனைக் காதலிப்பது தவறு தவறு என்று ஏதோ ஒன்று இடித்துக் கொண்டேயிருந்தது. நடராசன் அவள் மீது ஆசை கொண்டிருந்தான். அவளும் அவனைக் காதலித்திருப்பாள்! ஆனால் அந்தக் கையில் இருந்த ஊனம் அவளுக்குப் பெருங் குறையாகப் பட்டது. அதுவே அவள் நடராசன் மீது கொண்ட காதலை வளர விடாமல் தடுத்து நிறுத்தியது. இப்பொழுதோ அவளுடைய எண்ணம் இந்தப் புதிய இளைஞன் ராஜூவின் மீது படிகிறது. இவனும் கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/288&oldid=854410" இலிருந்து மீள்விக்கப்பட்டது