பக்கம்:மன ஊஞ்சல்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 279 இழந்தவன்தான். ஆனால், கைடேனிருக்கும் போதும் இவனை இரண்டொரு முறை தங்கம் பார்த்திருந்தபடியால் அந்த ஊனம் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், இவன் மீது எப்படி உள்ளம் ஈடுபட்டது என்று எண்ணிப் பார்க்கப் பார்க்க அவளுக்கு விந்தையாகவே யிருந்தது. இவனை முதலில் பார்த்த போதே எங்கோ பார்த்தது போன்ற பிரமை தோன்றுவானேன். இவனைப் பார்த்தபோதே இவனுக்கும் தனக்கும் நெடு நாள் தொடர் பிருப்பது போன்ற எண்ணம் ஏற்படுவானேன்? தங்கத்திற்கும் ஒன்றும் புரியவில்லை ஆனால் இந்தக் காதலும் நிறை வேறு மென்ற நம்பிக்கை தங்கத்துக்கில்லை. அத்த ராஜு வும் மலர்க்கொடியும் அவ்வளவு அன்பாகவும் ஆர்வமாகவும் பழகுவதைப் பார்த்த பிறகு, தான் இதில் இடையில் புகுவது நேர்மையாகவோ நியாயமாகவோ, பொருத்தமாகவோ அவளுக்குப் படவில்லை. இதிலும் ஏமாற்றங் காண நேரிடுவதற்கு முன்னால், தன் உள்ளத்தை அணைபோட்டு அந்தப் பக்கம் திரும்பாத படி தடுத்து விடவேண்டுமென்று எண்ணினாள். ஆனால், எண்ணமோ திரும்பத் திரும்ப ராஜுவைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்று இரவு முழுவதும் அவள் சரியாகத் துரங்கவேயில்லை. அதனால், அவள் காலையில் நெடுநேரம் சென்றே எழுந்திருந்தாள். எழுந்தவுடன், ராதாவின் அறைக்குச் சென்றாள். அவளோ. அப்பொழுது துரங்கிக் கொண்டிருந்தான். பாவம்: இரவு அவள் உள்ளம் எவ்வளவு தூரம் குழம்பியதோ! அன்று மாலை நான்கு மணிக்கு, மருத்துவ விடுதியில் போய் அந்த இளைஞனைப் பார்த்து வரலாமா என்று தங்கம் ராதாவைக் கேட்டபோது, அவள் மிகுந்த ஆவலோடு ஒப்புக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/289&oldid=854411" இலிருந்து மீள்விக்கப்பட்டது