பக்கம்:மன ஊஞ்சல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 19 கூடச் சொல்லலாம். ஒய்வு நேரத்திலே நாலுபேர் கூடினால் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந் தாலும் சரி அண்ணாமலைப் பண்டிதரைப் பற்றிப் பேசாமல் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட பெரிய மனிதராகி விட்ட அண்ணாமலைப் பண்டிதர் ஒரு சிலரின் விருப்புக்கும் வேறு சிலரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்த அந்த அண்ணா மலைப் பண்டிதர், முருகேச வாதியாருக்கு நெருங்கிய நண்ப ராகி விட்டார். இதனால் அண்ணாமலைப் பண்டிதரைப் பற்றிப் பேச்சு வளர்கின்ற இடங்களில் முருகேச வாத்தியாரின் பெயரும் ஓரிரு முறை அடிபடத்தான் செய்தது. அண்ணா மலைப் பண்டிதர் அந்த வட்டாரத்திலேயே ஒரு பெரிய வித்வான் என்று பெயர் பெற்றவர், தண்டமிழின் கரைகண்ட பண்டிதர் என்று கற்றறிந்தவர்கள் பலர் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள் . அண்ணாமலைப் பண்டிதர் நெய்யூர் அருகிலே யிருந்த கதலிப்பட்டணத்திலே யிருந்து வந்தார். வயது சுமார் ஐம்பது அல்லது ஒன்றிரண்டு கூடவும் இருக்கலாம். அவர் தம் வீட்டிலேயே உட்கார்ந்து நூலாராய்ச்சி செய்வதும், புது நூல்கள் எழுதுவதும் வேலையாகக் கொண்டிருந்தார். இடை யிடையே, வெளியூர்களுக்குச் சொற்பொழிவு செய்யப் போவ தும் உண்டு. நெய்யூர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவிலே சொற் பொழிவு செய்வதற்கு அண்ணாமலைப் பண்டிதரை அழைக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் பலர் விரும்பினார்கள். அவர் களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைமை யாசிரியரும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். பள்ளி ஆண்டு விழாவின் போது பிள்ளைகள் விளை யாட்டுப் போட்டியெல்லாம் முடிந்த பிறகு, மாலை ஆறு மணியைப் போல் பரிசு வழங்குதலும் சொற்பொழிவும் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/29&oldid=854412" இலிருந்து மீள்விக்கப்பட்டது