பக்கம்:மன ஊஞ்சல்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மன ஊஞ்சல் இருவரும் சரியாக மூன்றேமுக்கால் மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி ஒரு வாடகைக்காரை யமர்த்திக்கொண்டு பெரிய மருத்துவ விடுதிக்குச் சென்றார்கள் அங்கே ஏற்கனவே மலர்க்கொடியின் கார் வந்து நிற்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படவில்லை. உள்ளே வார்டில் ராஜூ தன் படுக்கையில் கைக்கட்டுடன் அமர்ந்து, எதிரில் முக்காவியில் அமர்ந்திருந்த மலர்க்கொடியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். தங்கத்தையும் ராதாவையும் கண்டவுடன், ராஜு தங்கத்துடன் மிக அன்பாகப் பேசினான். அவர்கள் தன்னைச் சரியான சமயத்தில் காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டான். ராதாவிடம் அவன் அவ்வளவாகப் பேச வில்லை. தங்கம் ராஜூவிடம் நிறையப் பேச வேண்டும்; நெடு நேரம் அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு வந்தாள். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்கு மேல் பேசுவதற்குச் செய்தி அகப்பட வில்லை. ஆனால், மலர்க்கொடி மட்டும் அவனுடன் விடாமல் பேசிக் கொண்டிருக்கிறாளே? அப்படி என்ன விஷயம் பற்றி இப்படித் தொடர்ந்து பேசிக் கொள்வார்கள் என்று தங்கத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் மூவரும் புறப்பட்டார்கள். வெளியில் வந்ததும், 'தங்கம் நீங்கள் இரண்டு பேரும் மருத்துவ விடுதிக்கு வருவதாகச் சொல்லவில்லையே, சொல்லியிருந்தால் நானே வந்து கூட்டிக் கொண்டு வந்திருப்பேனே!" என்று கேட்டாள். "மலர்க்கொடி, நீ வருவாயென்று எங்களுக்செப்படித் தெரியும்?' என்று கேட்டாள் ராதா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/290&oldid=854413" இலிருந்து மீள்விக்கப்பட்டது