பக்கம்:மன ஊஞ்சல்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 281 உடனே மலர்க்கொடியின் முகம் சிவந்தது. அவள் சமாளித்துக் கொண்டாள். 'தங்கம், நாளையிலிருந்து நான் வந்து உங்களைக் கூட்டிக் கொண்டு வருகிறேன். நீங்களாகப் புறப்பட்டு விடாதீர்கள்!" என்றாள். தங்கம் “சரி” என்றாள். தினமும் அந்த மூன்று பெண்களும் அந்த ராஜுவைத் தவறாமல் வந்து வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அத்தோடு, மலர்க்கொடியும் பலப்பல புதிய இடங்களுக்கு அவர்களைக்கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தாள். ஒரு நாள் மலர்க்கொடி, "தங்கம், நீயும் கார் ஒட்டப் பழகிக் கொள்ளேன். சொந்தத்தில் ஒரு கார் வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் பயனாக இருக்குமே!’ என்றாள். 'ஏன்? கார் வாங்கி ஒரு டிரைவர் சேர்த்து வைத்துக் கொண்டால் என்ன?’ என்று ராதா குறுக்கே கேட்டான். 'குடும்பப் பெண்களைப் பொறுத்தவரை அது விரும்பத் தக்கதல்ல. குடும்பப் பெண்கள் தாங்களே தங்கள் காரை ஒட்டிக் கொண்டு போவதுதான் சிறந்தது என்று மலர்க் கொடி பதில் சொன்னாள். தங்கம் தான் கார் ஒட்டப் பழக விரும்பவில்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், மலர்க்கொடி விடவேயில்லை. 'எப்படியாவது நீ காரோட்டப் பழகியே தீரவேண்டும்' என்று சொல்லியதோடு நில்லாமல் அவ்வப் போது கொஞ்சம் கொஞ்சமாக உடன்வைத்துக் கொண்டு பழக்கிக் கொடுத்து விட்டாள். ஆள்நடமாட்டமில்லாத வீதிகளில் போகும் போது, தங்கத்தையும் ராதாவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/291&oldid=854414" இலிருந்து மீள்விக்கப்பட்டது