பக்கம்:மன ஊஞ்சல்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மண் ஊஞ்சல் மாற்றி மாற்றி ஒட்டச் செய்து நன்றாகப் பழக்கி உரிமச் சீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டாள். இந்தச் செய்தியைக் கேட்டுக் கயிலாயம் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. இதற்கிடையில், மருத்துவ விடுதியில் இருந்த ராஜூவும் பூரண குணமடைந்துவிட்டான். அவனை மருத்துவ விடுதி யிலிருந்து அனுப்பும் நாளன்று, மலர்க்கொடி தன். தோழி மாருடன் அவனை அழைத்துச் செல்லக் கார் கொண்டு வந்திருந்தாள், மருத்துவ விடுதியிலிருந்து புறப்படும்போது, மலர்க் கொடி முன்னால் ஒட்டும் இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். ராதா அவளுக்குப் பக்கத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். பின்னால் ராஜு உட்கார்ந்திருந்தான். கடைசி யாகக் காரில் ஏறவந்த தங்கம்,ராதாவை இடித்துக்கொண்டு முன் பகுதியிலேயே ஏறி உட்கார்த்தாள். 'நெருக்கமாக இருந்தால் எனக்குக் கை இடிக்கும். ஒருத்தி பின் சீட்டிலே போய் உட்காருங்கள்' என்றாள் மலர்க் கொடி, ஒரத்தில் இருந்தவள் தங்கம். அவள்தான் பின்னால் உட்காரவேண்டியிருந்தது. அவளுக்கு மிகவும் வெட்கமா யிருந்தது. ஆனால், அவள் தான் பின்னால் போகவேண்டி யிருந்தது. சங்கடப் பட்டுக்கொண்டே அவள் பின்னால் போய் உட்கார்ந்தாள். ராஜூ அவளுடன் மிகவும் மரியாதையாகப் பேசினான். காரில் வரும்போதே அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்தான். அவையாவும் அவள் காதில் தேனாக ஒடியது. அவள் ஒருவிதமான மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். கார் போகும்போது, வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பக்கத்தில் தன்னுடன் வந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/292&oldid=854415" இலிருந்து மீள்விக்கப்பட்டது