பக்கம்:மன ஊஞ்சல்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 283 மற்றொரு சிறுவனிடம் "இதோ பாரு, மாப்பிள்ளையும் பெண்ணும் ஊர்கோலம் போகுது' என்று அவர்களைச் சுட்டிக் காட்டினான். அது தங்கத்தின் காதில் விழுந்தது. அந்தச் சிறுவனின் வாக்குப் பலிக்கக் கூடாதா தன் இதயப் போராட்டங்களுக்கு ஒரு முடிவு உடனடியாக ஏற்படக் கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது. ஆனால், மலர்க்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் தன் இதயக் கனவுகள் எதுவும் கிறை வேறாது என்றே அவளுக்குத் தோன்றியது. இப்படிப்பட்ட மனப் போராட்டங்களுடன் தன்னை மறந்திருந்த தங்கம், கார் ஒரு குலுங்கிக் குலுங்கி நின்ற போது தன் நினைவு பெற்றாள். மலர்க்கொடியின் வீடு வந்து விட்டது. எல்லோரும் இறங்கினார்கள். ராஜூ அவனுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து அவனை நலம் விசாரித்தார்கள். பிறகு தங்கமும் ராதாவும் ஜமீந்தார் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார்கள். கடற்கரைக்கு உலாவப் போகலாம் என்று அழைத்துச் செல்வதற்காக தங்கத்தையும் ராதாவையும் தேடி ஒரு நாள் மலர்க்கொடி வந்தாள். தங்கத்துக்கு அன்று தடிமன் பிடித்திருந்ததாலும் இலேசாக மண்டை யுடைத்துக் கொண் டிருந்ததாலும் வரவில்லை என்று கூறிவிட்டாள். ராதாவும் மலர்க்கொடியும் மட்டும் சென்றார்கள். அடுத்த நாளும் ராதாவும் மலர்க்கொடியும் மட்டுமே கடற்கரைக்குப் போயிருந்தார்கள். தங்கத்திற்குத் தடிமன் விடாததால் அன்றும் அவள் அவர்களுடன் போகவில்லை. தங்கம் மாளிகையின் முன்பகுதியில் உள்ள வராந்தாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/293&oldid=854416" இலிருந்து மீள்விக்கப்பட்டது