பக்கம்:மன ஊஞ்சல்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மன ஊஞ்சல் வந்து அங்கு கிடந்த சாய்வுப் பிரம்பு நாற்காலியொன்றில் சாய்ந்து கொண்டு ஒரு கதைப் புத்தகம் படித்துக் கொண் டிருந்தாள். அப்போது அங்கே ஒரு சிறுவன் ஒடி வந்து, ""ராதா அக்கா இருக்காங்களா?’ என்று கேட்டான். அத்த சிறுவனைப் பார்த்தால், வசதியான குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவனாகத் தோன்றியது. "என் தம்பி? என்ன வேண்டும்?' என்று தங்கம் கேட்டாள். 'இந்தாங்க, இதை உங்ககிட்டே கொடுத்திட்டு வரச் சொன்னாங்க’’ என்று உறையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொடுத்தான் அந்தச் சிறுவன். 'யார் கொடுத்தது?" என்று தங்கம் கேட்டு முடிக்கும் போது அந்தச் சிறுவன் வீதியை அடைந்து விட்டான். கடிதத்தின் உறை ஒட்டப்பட்டிருந்தது அதன் மேல் எதுவும் எழுதப்படவில்லை. அந்தக் கடிதத்தைப் பார்க்கப் பார்க்க அதில் ஏதோ மர்மச் செய்தி அடங்கியிருப்பதுபோல் தோன்றியது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதில் அப்படி என்ன எழுதியிருக்கும்? யார் இப்படி இரகசியக் கடிதத்தை இராதாவுக்கு எழுதுவார்கள் என்றெல்லாம் தங்கத்தின் மனம் அலைபாய்ந்தது. ஆனால், தங்கம் கடைசிவரையிலும் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவில்லை. நினைத்திருந்தால் அவள் படித்துப் பார்த்திருக்கலாம். கடிதத்தின் உறையைக் கிழித்தெடுத்து படித்துவிட்டு மறுபடி யும் ஓர் உறையில் ஒட்டி இராதாவிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் தங்கம் அப்படிச் செய்யக் கூடியவளல்ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/294&oldid=854417" இலிருந்து மீள்விக்கப்பட்டது