பக்கம்:மன ஊஞ்சல்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 285 கடற்கரையிலிருந்து இராதா திரும்பி வந்தவுடன், தங்கம் அவளைத் தனியே அழைத்து, கடிதத்தைக் கொடுத்து அது கிடைத்த விவரத்தையும் கூறினாள். கூறிவிட்டுத் தங்கம் வெளியில் வந்து விட்டாள். இராதா வியப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள். அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது அவள் நெஞ்சு படபடத்தது. அதைப் படித்து முடித்ததும் அவள் தாங்க முடியாத துயருடன் பித்துப் பிடித்தவளைப்போல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் அடைந்த வேதனையின் மிகுதி அவளை அழல் கூட விடவில்லை. எவ்வளவு நேரம் அவள் இந்த நிலையில் இருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. ஆனால், வெளியே காத்துக் கொண்டிருந்த தங்கத்திற்கு அவ்வளவு நேரமும் மிகப் பெரிய நூற்றாண்டு ஒன்று கழிவது போலத் தெரிந்தது. ஏதேனும் முக்கியமான அல்லது அதிசயமான அல்லது வியப்பான செய்தியாக இருந்தால் இராதா தன்னி டம் உடனே சொல்லி விடுவாள் என்பது தங்கத்துக்குத் தெரி யும். ஆனால், கடிதம் கொடுக்கப்பட்டதிலிருந்து அவளிட மிருந்து எவ்விதமான அழைப்பும் வராததோடு அவளும் வெளியே வராதது தங்கத்தின் ஆவலுணர்ச்சியை மேலும் தூண்டுவதாயிருந்தது. ஆனால், அழைக்கப் படாமல் உள்ளே நுழைய தங்கம் முற்படவே இல்லை. அழைப்பு வரட்டும் என்றே காத்திருந் தாள். கடைசியில் இரவுச் சாப்பாட்டு நேரம் வந்து ஜமீந்தாரிணியம்மாளும் மரகத அம்மாளும் அவர்களை உணவுண்ண அழைத்த பிறகுதான், தங்கம் இராதாவை அழைக்க அந்த அறைக்குள்ளே நுழைந்தாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/295&oldid=854418" இலிருந்து மீள்விக்கப்பட்டது