பக்கம்:மன ஊஞ்சல்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மன ஊஞ்சல் உள்ளே தலைநீட்டியவுடனேயே ராதா இருந்த நிலையைப் பார்த்து தங்கத்தின் உள்ளம் ஆட்டங்கண்டு விட்டது. ராதா இருந்த நிலையைப் பார்க்க அவளால் பொறுக்க முடிய வில்லை. ஏதோ பிரமை பிடித்தவள் மாதிரி கண் களை அகலத் திறந்து கொண்டு உச்சித் தளத்தைப் பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா. அவள் கண்கள் அகன்றிருந்தனவே தவிர அவற்றிலே ஒளியில்லை.-எதிரில் வருவாரை அறியும் ஆற்றலை அவை இழந்திருந்தன. தங்கம் ஒடிச் சென்று ராதாவைக் கட்டியணைத்துக் கொண்டு, “ராதா ராதா? ஏன் இப்படியிருக்கிறாய்?" என்று பதைப் பதைப்பான குரலுடன் கேட்டாள். இராதாவின் காதில் அந்த வார்த்தைகள் விழவே யில்லை. அவள் பரக்கப் பரக்கப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். தங்கத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பயந்து போய் 'அம்மா! அம்மா!' என்று கத்தினாள். மரகத அம்மாளும் ஐமீந்தாரிணியம்மாளும் விரைந்து வந்தார்கள். ராதா இருந்த நிலை அவர்களையும் கதிகுலையச் செய்தது. டாக்டருக்கு உடனே ஆளனுப்பினார்கள். வீடு முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. அந்தப் பரபரப்பினிடையே தங்கம் ஒரு வேலை செய் தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/296&oldid=854419" இலிருந்து மீள்விக்கப்பட்டது