பக்கம்:மன ஊஞ்சல்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 287 ராதாவுக்கு வந்த கடிதம் எங்கேயென்று தேடித் தரை யில் ஒரு புறம் விழுந்து கிடந்த அந்தக் கடிதத்தை எடுத்துத் தன் இடுப்பிலே செருகி வைத்துக்கொண்டான். டாக்டர் வந்து பார்த்து, ஏதோ மன அதிர்ச்சியின் காரணமாக ராதாவுக்கு இப்படி ஏற்பட்டிருக்கிறது என்றும். நேரம் ஆக ஆகச் சரியாகப் போய்விடும் என்றும் சொல்வி மருந்து கொடுத்துவிட்டுச் சென்றார். இரவில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்த தங்கம் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது அவளுடைய உள்ளத்தில் பலமான போராட்டம் ஒன்று எழுந்தது. அந்தப் போராட்டம் நின்று அவள் ஒரு முடிவு காண்பதென்பது இயலாத காரியமாயிருந்தது. இராதாவின் மன நிலைமையை அந்தக் கடிதம் மாற்றி யது வியப்பிற்குரியதல்ல என்று நிச்சயித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/297&oldid=854420" இலிருந்து மீள்விக்கப்பட்டது