பக்கம்:மன ஊஞ்சல்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dজয়ী ஊஞ்சல் 29. மாப்பிள்ளை வருகிறார்! அன்புள்ள ராதா, வீணான கற்பனைகளில் நீ மனத்தை அலட்டிக் கொண் டிருக்க வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உன் உயர் குணங்களை நான் மதிக்கிறேன்; அன்பும் செலுத்துகிறேன். ஆனால், நீ என்னிடம் காதல் கொண்டிருப்பது நேற்று வரை எனக்குத் தெரியாது. நேற்றுத் தற்செயலாக நான் கடற்கரையில் உட்கார்ந்திருந்த போது, சிறிது துரத்தில் நீயும், உன் பணக்காரத் தோழி ஒருத்தியும் பேசிக் கொண்டிருந்த விஷயங்கள் என் காதில் விழுந்தன. பிறர் பேசுவதை நான் காதுகொடுத்துக் கேட்கும் வழக்கம் கிடையாது. ஆனால், நேற்றைய உங்கள் உரையாடலில் அடிக்கடி என் பெயர் அடிபட்டதால் நான் சற்று கூர்மை யாகக் கவனிக்க நேர்ந்தது. ராதா! உன் இதயத்தின் காதல் பீடத்தில் நீ எனக்கு நிறைய இடம் ஒதுக்கியிருக்கிறாய். ஆனால், அந்த இடத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாக நான் இல்லை. அதிர்ச்சியடைந்துவிடாதே! மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள், உனக்கு ஏற்ற கணவன் ஒருவனைக் கூடி நீ இல்லற வாழ்வில் இனிது ஈடுபடவேண்டும் என்பதே என் விருப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/298&oldid=854421" இலிருந்து மீள்விக்கப்பட்டது