பக்கம்:மன ஊஞ்சல்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 289 நீ என்னைப் பற்றிய நினைப்பை விட்டுவிட வேண்டிக் கொள்கிறேன். இதற்கு காரணம் என்னவென்றால், உன்னைப் போலவே என் இதயத்தை நாள் இன்னொருத்திக் காகத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன். அவள் என்னை விரும்பாததுபோல் தோன்றினாலும், விரைவில் அவள் என் அன்புக்குக் கட்டுப்படுவாள் என்று நான் முழு நம்பிக்கையோடு இருந்து வருகிறேன். அவளை நினைத்த நெஞ்சால், இன்னொருத்தியை என்னால் நினைக்க முடிய வில்லை. ராதா என்னை மன்னித்துக்கொள். நான் காதலிக் கும் பெண் எப்படிப்பட்டவள் என்று நீ அறிந்து கொள்ள ஆசைப்படக்கூடும். அதற்காகவே சொல்லுகிறேன். அவள் தான் உன் தோழி தங்கம். ராதா ! இனி நீ என்னை மறந்துவிடு! வீண் மனக் கோட்டைகள் எழுப்பிக் கடைசியில் நீ துன்பத்தில் சரிந்து விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் இப்பொழுதே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், அன்புள்ள நடராசன். தங்கம், இந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது அவள் சிந்தனை குழம்பியது. என்ன முடிவுக்கு வருவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. நடராசன் சென்னையில்தான் இருக்கிறான். அதுவும் தன்னை மறவாமல் இருக்கிறான் என்ற நினைப்பு அவள் உள்ளத்தில் ஏதோ ஒருவிதமான உணர்ச்சியை உண்டாக் கியது. அவள் மனம் சுற்றிச் சுற்றி வந்தது. அவள் வாழ்க்கை யில் எதிர்பட்டவர்கள் மூன்றுபேர். அத்தான் சுந்தரேசனைப் பற்றி நினைப்பதே பாவம்! அவன் அத்தகைய கொடிய to -19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/299&oldid=854422" இலிருந்து மீள்விக்கப்பட்டது