பக்கம்:மன ஊஞ்சல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மன ஊஞ்சல் சாதாரணமாக அந்த ஊர் மக்கள் விளையாட்டுப் போட்டி பார்த்து முடிந்ததும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் அண்ணாமலைப் பண்டிதரின் பெயர் எங்கும் தெரிந்து பரவியிருந்தபடியால், அவர் பேச்சைக் கேட் பதற்கு என்று எல்லோரும் தங்கியிருந்தார்கள். அண்ணா மலைப் பண்டிதர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து தமது சொற்பொழிவைத் தொடங்கினார். அவர் பேச்சு முழுவதும் அந்த ஊர் மக்களுக்குப் புதிதாயிருந்தது. அவர் கள் இதுவரை மனத்தில் நினைத்துக்கூடப் பார்க்காத பல கருத்துக்களை அண்ணாமலைப் பண்டிதர் பேசினார். அண்ணாமலைப் பண்டிதரின் பேச்சு சிலருக்குச் சிந்தனை யைக் கிளறிவிடுவதாயிருந்தது; சிலருக்கு ஆத்திரத்தை முட்டிவிடுவதாயிருந்தது. அவர் கூறிய கருத்துக்கள் சிலருக்குக் குளிர் தென்றலாக வீசி, இன்பம் தருவனவாக இருந்தன: சிலருக்கு அனற் காற்றாக அடித்து வேதனைத் துடிப்பில் ஆழ்த்துவனவாக இருந்தன. அண்ணாமலைப் பண்டிதர், தமிழ் மொழியின் பெருமை யைப் பற்றிப் பேசினார்; தமிழ் அரசர்களின் பண்பு, வீரம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். இத்தோடு நின்றிருந்தால் கேட்டவர்கள் கேட்டு விட்டு அவரவர் வீட்டுக்குப் போய்ப் பேசாமல் துரங்கியிருப்பார்கள். ஆனால், அவர் தமிழனின் இன்றைய நிலையை அவ்வப்போது முந்திய நிலையோடு ஒப்பிட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். "ஆண்டவனை அருச் சிக்கும் போது தாய் மொழியில் போற்றி அருச்சிக்காவிட்டால் உள்ளம் இறைவனோடு எவ்வாறு அமையும்?' என்று கேட் டார். இன்னும் ஆடு வெட்டுதல், கோழியறுத்தல் முதவிய பலியிடும் வழக்கங்கள் அருத்தமற்றவை யென்று கூறினார். அத்தோடு நில்லாமல், சாத்திரம் பேசுதல், சகுனம் பார்த் தல், சோதிடம் கேட்டல், சாதகம் பார்த்தல், முதலிய மூட நம்பிக்கைகளை யெல்லாம் களைந்தால்தான் நல்லறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/30&oldid=854424" இலிருந்து மீள்விக்கப்பட்டது