பக்கம்:மன ஊஞ்சல்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மன ஊஞ்சல் வனாக இருக்கிறான் என்பதைத் தங்கம் புரிந்து கொண்டு விட்டாள். ஆகவே அவனை ஒதுக்கிவிட வேண்டியதுதான். அத்தானுக்கு முன்அவள் கண்ணில் தட்டுப்பட்டுக் கருத்தைக் கவர்ந்தவன் நடராசன் தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் கருத்தில் புகுந்த சிறிது நேரத்திலேயே தங்கம் அவன் எண்ணத்தைத் தள்ளிவிட்டாள். அதற்குக் காரணம் அந்த அரைகுறையான கை. ஆனால், இப்போது அவனைப் போலவே வெட்டுண்ட கையோடு இருக்கும் ராஜூவிடம் கூடத் தன் மனம் அலைபாய்கிறதே, இது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. ராஜூவும் மலர்க்கொடியும் ஒருவரையொருவர் காதலிக் கிறார்கள் என்றுதான் தங்கம் நினைத்தாள், அவர்கள் காதலுக்குக் குறுக்கே தான் நுழைவது சரியல்ல என்று அவள் அறிவு உணர்த்தியது. கடைசியாகத் தனக்கு மிஞ்சுபவன் நடராசன்தானா? தங்கம் இந்தக் கேள்வியைத் தன் இதயத்துக்குள்ளே கேட்டுப் பார்த்துக் கொண்டாள். நடராசனுடைய பழைய உருவத்தை அவன் தன் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தாள். அது தெளி வாகத் தெரியவில்லை. பார்த்து அதிக நாளாகி விட்டதல்லவா? நடராசனுடைய கபடமற்ற பேச்சுக்களும், இனிய குணங் சளும் அவள் கருத்தில் தோன்றின. தன்னையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவன் அப்போது தொடங்கிச் சொன்ன சொற்கள் அவள் காதுகளிலே மீண்டும் ஒலித்தன. கடைசியாக அவள் கையிலிருந்த கடிதமும் அவன் காதலை எடுத்துக் காட்டிக் கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/300&oldid=854425" இலிருந்து மீள்விக்கப்பட்டது