பக்கம்:மன ஊஞ்சல்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 291 திரும்பவும் ராஜூ அவள் மனக்கண் முன்தோன்றினான். தங்கம் ராஜூவையும் நடராசனையும் ஒப்பிட்டுப் பார்த் தாள். இருவருக்குமே நல்ல குணம். ஏறக்குறைய ஒரே மாதிரி யான உருவம் ஒரே மாதிரியான கையூனம், இருந்த வேற்றுமை யொன்றேயொன்றுதான்! நடராசன் பட்டிக் காட்டான், ராஜூ பட்டணத்தான். நடராசன் தன்னை மனதார நேசிக்கிறான்-ராஜூவின் நேசமோ மலர்க்கொடி யிடம் திரும்பியிருக்கிறது. தன் உள்ளம் ஏன் இப்படி நீதி நியாயத்திற்குக் கட்டுப்படாமல் என்னென்னவோ எண்ணு கிறது என்று தங்கத்திற்குப் புரியவில்லை. ஒருமுறை நடராசனைப்பார்க்கவேண்டும் போலிருந்தது. எங்கே பார்க்கலாம்? கடிதத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த் தாள். முகவரி எதுவும் அதில் எழுதப்படவில்லை. கடிதம் கொண்டுவந்த சிறுவனைத் தான் எதுவும் விசாரிக்காமல் அனுப்பியது தவறு என்று எண்ணினாள், ஆனால், இனி அதை எண்ணிப் பயனில்லை. நடராசன் இருக்குமிடம் தெரி யாதது அவளுக்கு என்னவோ மாதிரியிருந்தது. திடீரென்று அவளுடைய சிந்தனை புது மாதிரியான திசையில் வேலை செய்ய ஆரம்பித்தது. காதல் அன்பு ஆசை என்பதெல்லாம் வெறும் மாயை. காதல் உண்மையென்றால், அது இரண்டுபுறமும் அன்பும் விருப்பும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உலகத்தில் எங்கே அதுபோல் இருக்கிறது? ராதாவுக்கு நடராசன் மேல் ஆசை நடராசன் என்னை விரும்புகிறான். எனக்கோ ராஜூ கவர்ச்சியாகத் தென்படுகிறான். ராஜூ மலர்க்கொடியிடம் அன்பாயிருக்கிறான். மலர்க்கொடி..? அவள் ராஜூவிடம் அன்பாயிருக்கிறாளே, அது உண்மையான காதல் தாள்! அப்படி இருந்தால் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆ-வர்களைப் பற்றி நினைப்பதே கூடாது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/301&oldid=854426" இலிருந்து மீள்விக்கப்பட்டது