பக்கம்:மன ஊஞ்சல்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மன ஊஞ்சல் தான் ஏன் அவரையும் இவரையும் எண்ணிக் கொண் டிருக்க வேண்டும்? இவ்வளவு நாட்கள் இருந்தது போல இனியும் இருந்து விட்டால் என்ன? அப்பா அம்மாவுக்கு வருத்தம் ஏற்படும், நம் பெண் திருமணமாகாமல் இருக் கிறாளே, நம்மால் திருமணம் செய்து வைக்க முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப் படுவார்கள், அதற்குத் தான் பார்க்க வேண்டிருக்கிறது. இவ்வளவு நாளும், கையில்செல்வமில்லாத காரணத்தால் திருமணம் நடக்காமல் இருந்தது. கையில் செல்வமிருந்தும், திருமணத் தடைப்படுகிறது என்ற நிலைமை வந்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் படும். இதற்கு என்னதான் முடிவு? தனக்கோ, மனம் பற்று வைக்கிற இடமெல்லாம் ஒட்டுறவு ஏற்படாத இடமாக மாறிவிடுகிறது. ஒருவகையில் இல்லாவிட்டால் ஒருவகையில் தன் காதல் தோல்விப் பாதையிலேயே போகிறது. இப்படிப்பட்ட காதல் ஏற்படுவதைக் காட்டிலும் ஏற்படாமல் இருந்தால் நல்லதல்லவா? என்னை யார் காதலிக்கச் சொன்னார்கள்? நானாகத் தானே எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு வேதனைப் படுகிறேன். காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று சட்டமா? இன்னும் சொல்லப்போனால், சமுதாயத்திலே காதல் திருமணங்களுக்குத்தானே எதிர்ப்பு இருக்கிறது. நான் யாரையாவது, உறுதியாகக் காதலித்து இவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னால், அது அப்பா, அம்மாவுக்குப் பிடிக்காமல்கூட இருக்கலாம். கயிலாய மாமாவுக்குக்கூடப் பிடிக்காமல் இருக்கலாம். ஏன் இந்த வம்பெல்லாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/302&oldid=854427" இலிருந்து மீள்விக்கப்பட்டது