பக்கம்:மன ஊஞ்சல்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 293 இனிமேல் இந்த மனத்தில் காதலைப் பற்றியே சிந்திக்கக் கூடாது. வீண் போராட்டங்களுக்கு இடங்கொடுத்தால் கடைசியில் ராதாவைப்போல் மனதாரக் காதலித்து அது கைகூடாவிட்டால் சித்தப்பிரமைக.ட ஏற்படக்கூடும். இந்த வம்பெல்லாம் வேண்டாம். நடராசனை ராதாவே திருமணம் செய்துகொள்ளட்டும், ராஜ"வை மலர்க்கொடியே மணந்துகொள்ளட்டும், நான் சும்மாயிருக்கிறேன். திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். அப்பாவும், அம்மாவும் மாமாவும் வருத்தப்பட்டால், "வருத்தப்படாதீர்கள்! நீங்கள் பார்க்கிறமாப்பிள்ளையையே கட்டிக்கொள்கிறேன்' என்று சொல்லிவிடுகிறேன். இதில் வம்பில்லையல்லவா? யாரைக் கணவனாகப் பெற்றாலும், மனத்தை அவர்மீது செலுத்தினால், அவர் பதிலுக்குக் காதலிக்காமலா இருக்கப்போகிறார்? இதுதான் சரியான முடிவு. இப்போது காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம். எல்லாம் திருமணத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஆனால், நடராசன், என்னைக் காதலிப்ப தாகச் சொல்லுகிறானே! பாவம்! ஏற்கனவே அரைப் பைத்தியமாக இருந்தவன். மாமா உதவியால் தெளிவு ஏற்பட்டது, இப்போது அவன் என் மீது கொண்டுள்ள காதலில், ஏமாற்றமடைந்து, ராதாவைப்போலவே அதிர்ச்சி யடைந்து மீண்டும் பைத்தியமாகிவிட்டால்.. ? ஐயோ! பாவம்! அப்படி யாகும்படி விடக்கூடாது. அதற்காக அவனைக் கட்டிக் கொள்வதா? அப்படி யானால் ராதாவின் கதி! ராதா, பாவம் மிகவும் நல்லவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/303&oldid=854428" இலிருந்து மீள்விக்கப்பட்டது