பக்கம்:மன ஊஞ்சல்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மன ஊஞ்சல் அவள் துயரப்படும்படி விடக் கூடாது, எப்படியாவது நடராசனை அவளோடு சேர்த்து வைத்துவிட வேண்டும். மாறி மாறித் தங்கத்தின் சிந்தனை சுழன்று கொண் டிருந்தது. இரவு வெகுநேரம் வரை அவள் துரங்கவேயில்லை. பலதரப்பட்ட எண்ணங்களோடு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நள்ளிரவில் யாரோ தன் அறைக்கதவை இலேசாகத் தட்டுவது போலிருந்தது. முதலில் தங்கம் அதைக் கவனிக்க வில்லை. பிறகு, மீண்டும் அந்த ஓசை காதில் விழுந்த போது தங்கம் கவனித்தாள். வேறு எங்கோ ஏதோ சத்தம் ஏற்படு கிறதென்று நினைத்துக் கொண்டாள். மூன்றாவது தடவை யாகக் கதவுதட்டப் பட்டபோது, தன் அறைக் கதவைத் தான் யாரோ தட்டுகிறார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். 'தங்கம், தங்கம்’ என்று யாரோ தன்னை அழைப்பது போலவும் இருந்தது. தங்கத்திற்குப் பயமாயிருந்தது, இருட்டில் யார் அப்படித் தன்னை அழைக்கக் கூடும் என்று அவளால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால், விட்டுவிட்டுக் கதவு தட்டப் படும் அந்த இலேசான ஒசை கேட்டுக் கொண்டேயிருந்த தால், கதவைத் திறந்து பார்த்து விடுவதென்று முடிவு செய்தாள். நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, உடல் வெடவெட வென்று நடுங்க அவள் மெல்ல எழுந்து சென்று, விளக்கைத் தட்டினாள். கதவின் தாளை அகற்றினாள். உடனே ஓசைப்படாமல் மெதுவாகக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ராதா! ராதாவைக்கண்டதும் தங்கத்திற்கு உடம்பு பதறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/306&oldid=854431" இலிருந்து மீள்விக்கப்பட்டது