பக்கம்:மன ஊஞ்சல்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 295 பிரமை பிடித்த நிலையில் அவள் என்னென்ன செய்வாளோ? அதுவும் இந்த நள்ளிரவில் தன்னத்தனியாகத் தான் இருக்கும் போது அவள் காதலுக்குரியவன் தன்னைக் காதலிக்கிறான் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட சித்த பேதத்தோடு வந்துள்ள அவள் என்னெனன செய்வாளோ என்று தங்கம் அஞ்சினாள். பயத்தோடு அவள் ராதாவை நிமிர்ந்து நோக்கினாள் வெளிச்சம் ராதாவின் முகத்திற்கு நேராக அடித்துக் கொண் டிருந்தது. அந்த முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவான தோற்றம் தங்கத்தின் பயத்தைப் போக்கடித்து விட்டது. "தங்கம், இங்கே வா!' என்று ராதா அவளைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து கட்டிலின் மேல் உட்கார வைத்தாள். ராதா என்ன சொல்லப் போகிறாள் என்று தங்கம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

  • தங்கம், நான் ஒன்று சொல்லுகிறேன். அதன்படி கேட்பாயா?”

"சொல்லு" 'கேட்கிறேன் என்று உறுதி சொன்னால்தான் சொல்லுவேன்.", “ராதா உனக்காக நாள் எதையும் செய்வேன். ஆகவே, சந்தேகப்படாமல் சொல்லு!' என்றாள் தங்கம். 'அதெல்லாம் எனக்குத் தெரியும். தங்கம், உன் குணத்தை நான் அறியாதவளா என்ன? ஆனால், இப்போது நீ வாக்குறுதி கொடுத்துத் தான் ஆகவேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/307&oldid=854432" இலிருந்து மீள்விக்கப்பட்டது