பக்கம்:மன ஊஞ்சல்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மன ஊஞ்சல் 'சரி, நீ சொல்லுகிறபடி கேட்கிறேன். செய்தியைச் சொல்லு' என்றாள் தங்கம். ராதா நிறைவுடன் சொல்லத் தொடங்கினாள். 'தங்கம், உன்னிடம் வாக்குறுதி கேட்டிருக்க வேண்டிய தில்லை. ஆனால், அந்த உறுதி கேட்காமல் என் மனம் அமைதிப்ப்படவில்லை. இப்போது நீ உறுதி சொல்லி விட்டபடியால், நான் துணிந்து சொல்லுகிறேன். உன் தோழிக்காக நீ இந்த உதவியை உறுதியாகச் செய்துதான் ஆகவேண்டும். ஆம்! உன் ஆருயிர்த் தோழியின் இதய விருப்பத்தை நிறைவு செய்வதற்காக நீ நான் சொல்லுகிற படி செய்யத்தான் வேண்டும். தங்கம், எனக்காக-இதைச் செய்! நீ அவரை-நடராசனைத் திருமணம் செய்துகொள்!" என்றாள் ராதா. தங்கம் பதறினாள்! "ராதா, என்ன உளறுகிறாய்?" என்று கோபத்தோடு கேட்டாள். ராதாவின் பைத்தியம் இன்னும் தெளியவில்லை என்று நினைத்துக்கொண்டாள். ஆனால், ராதா தெளிவான குரலில் தொடர்ந்து கூறினாள். தங்கம், உனக்கு அவரைப் பிடிக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரைக் காதலிக்கிறேன் என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் தெரியுமா? தங்கம், அவர் இன்ப மாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள். நீ அவரைக் காதலிக்காவிட்டாலும் அவர் உன்னைக் காதலிக் கிறார். நான் எவ்வளவு தூரம் அவரைக் காதலிக்கிறேனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/308&oldid=854433" இலிருந்து மீள்விக்கப்பட்டது