பக்கம்:மன ஊஞ்சல்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 297 அவ்வளவு தூரம் அவர் உன்னைக் காதலிக்கிறார். தங்கம், நான் ஒரு பெண். என்னால் இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியும். ஏமாற்றத்தைப் பெண்கள் இதயம் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், அவர் ஓர் ஆண். அதிலும், ஏற்கனவே அவருடைய இதயம் பைத்தியக்கார நிலையில் இருந்தது. இதுபோன்ற ஏமாற்றத்திற்கு அவர் ஆளானால் பாவம்! மீண்டும் பைத்தியக்காரர் ஆகிவிடுவார். தங்கம், உனக்குத் தெரியாது அவர் உன்னைக் காதலிக்கிறார் என்று. அவர் எனக்கு எழுதியிருக்கிறார். அவர் என்னை விரும்பா விட்டாலும் என் இதய பீடத்தில் என்றும் வாழுகிறார். அவர் துயரப்பட்டால் என் உள்ளம் துடிக்கும். அவர் இன்ப மாக வாழ்ந்தால் என் இதயம் களிக்கும், தங்கம் அவருக்கு வாழ்வளித்து எனக்கு மனநிறை வளிக்க நீ அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், செய்து கொள்ளு வாயா தங்கம்' என்று கேட்டாள் ராதா, தங்கம்- ராதாவை நோக்கித் திருதிருவென்று விழித்துத் கொண்டிருந்தாள். என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. ராதாவின் போக்கு ஒவ்வொன் றும் வியப்பூட்டுவதாக இருந்தது. ராதாவின் உள்ளத்தில் படிந்திருந்த துரய்மையின் மேம்பாட்டை எவ்வளவு முயன்றாலும் தன்னால் எட்டிப் பிடிக்க முடியுமா என்று அவளால் எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை 'தங்கம், அவர் கையில் உள்ள ஊனத்தையே பெரிதாக எண்ணிக் கவலைப்படாதே! அவருடைய உள்ளத்துாய்மையும் குணச் சிறப்பும் அறிவு நலமும் உனக்குத் தெரியாததல்ல. அவரை மணம் புரிந்து கொள்வதால் உனக்கு ஒன்றும் குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/309&oldid=854434" இலிருந்து மீள்விக்கப்பட்டது