பக்கம்:மன ஊஞ்சல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 21 பிறக்கும் என்று கூறினார். ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள் தான் கோளிலும் குறியிலும் நம்பிக்கை கொண்டு அலைவார்கள் என்று சொன்னார். ஆண்டவன் படைப்பில் எல்லோரும் சமமே என்று சொன்னார். இப்படி அவர் தெய்வீகத்தையும் விட்டுக்கொடுக்காமல் மூடத்தனத் தையும் விட்டு வைக்காமல் பேசினார். அவர் போக்கே, புதுமையாயிருந்தது. அண்ணாமலைப் பண்டிதருடைய பேச்சிலே அப்படி யொன்றும் விந்தையான புதுமையில்லை யென்றாலும் அங்கிருந்த மக்களுக்குப் புரட்சிகரமாகத் தோன்றியது. ‘அண்ணாமலைப் பண்டிதர் நாத்திகக் கட்சியைச் சேர்ந்தவர் அவர் ஒரு நாத்திகர்' என்று சிலர் பேசிக்கொண்டார்கள். அப்படிப் பேசிக்கொண்டவர்களைப் பார்த்து அவர் திரு நீறு பூசியிருக்கிறாரே? என்று கேட்டால், "ஆமாம்! திரு நீறு பூசிய நாத்திகர்!" என்று அந்தப் பழமை வாதிகள் பளிச் சென்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட பிரசாரத்திற்கு இலக்காகியிருந்த அண்ணாமலைப் பண்டிதர்மீது கந்தசாமி வாத்தியாருக்கு ஒர் அன்பு ஏற்பட்டுவிட்டது. அண்ணாமலைப் பண்டிதர் கூறும் கருத்துக்கள் சரியானவை என்று அவருக்குத் தோன்றின. ஆண்டு விழா முடிந்தவுடனேயே அவரைத் தம் வீட்டுக்கு விருந்துக்குக் கூட்டி வந்துவிட்டார். 'ஏதோ ஏழை வாத்தியார்; சாப்பாடு சாதாரணமாக இருந்தாலும் அதற்காக நீங்கள் குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது!’ என்று இலையில் உட்காரும் போது கூறினார் கந்தசாமி. "அன்போடு கூழை வார்த்தாலும் அது அமுதாகி விடாதா?’ என்று கேட்டுவிட்டுப் படைத்திருந்த கீரை மசியலைக் கொஞ்சம் நாக்கிலிட்டுச் சுவை பார்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/31&oldid=854435" இலிருந்து மீள்விக்கப்பட்டது